April 29, 2019

தெஹிவளையில் 6 வாள்களுடன் 2 வர்த்தகர்கள் கைது


தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன்  இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 மா​டிகளைக் கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிலிருந்தும், மற்றொரு வர்த்தகரின் வீட்டிலிருந்தும் இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுள் ஒருவர் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் ஏனைய வர்த்தகர் மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment