April 29, 2019

பலி தீர்ப்பதற்காகவே, இலங்கையை தாக்கினோம் - 5 வருடங்களின் பின் தோன்றிய பக்தாத்தி அறிவிப்பு


சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர்  அல் பக்டாடி, காணொளியொன்றின் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள பக்டாடியின் 18 நிமிடங்கள் கொண்டுள்ள இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்து பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அபூபக்கர் அல் பக்டாடி, எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.  

அந்தக் காணொளியில், சிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிர​தேசம் , அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து கடந்த ஒரு மாத்துக்கு முன்னர் பறிக்கப்பட்டமைக்கு பலி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் எனவே, இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் பலியானமைக்கு, ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும் அதை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

7 கருத்துரைகள்:

இந்த செயல்களில் இருந்து நன்றாகவே விளங்குது நீ ஒரு யூத நாய் என்று அநியமாக கிருஸ்துவ சகோதர சகோதரிகளே கொண்டதுக்கு அல்லாஹ் உனக்கு நிச்சயம் கேவலமான ஒரு மரணத்தை உனக்கு தருவான்.

இந்த இஷ்ரவேல் காரன் நமது நாட்டின் அமைதியை சீர்குலைத்து இந்நாட்டிலுள்ள சமூகங்களின் மத்தியில் நிம்மதியையும் அமைதியையும் சீர்குலைத்துள்ளான்.

இந்தக் கொலைவெறியனின் வம்பினால் நம்நாட்டு முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர். இவன் நாசமாகட்டும்

இலங்கையைச் சுரண்டவும் அதன் வளங்களைத் தம் வசப்படுத்தவும் அமெரிக்கா மிகவும் காத்திரமான இட்ட திட்டங்கள் இன்று நேற்றல்ல, அதன் வரலாறு பல பத்தாண்டுகளைக் கடந்தது. கடந்த 30 வருடங்களாக செயற்படுத்தும் திட்டத்தின் பெயர் ஐஸ்ஐஸ், இந்த நுட்பமாக இடப்பட்ட திட்டத்தின் மூலம் இஸ்லாத்தின் பெயரால் இளைஞர்களைக் கவர்ந்து பணத்தையும் கவர்ச்சியான ஆயுதங்கள் ஏனைய தொழில்நுட்பத்தையும் அவர்களுக்கு வழங்கி இந்த நாட்டில் முஸ்லிம்களைப் பலிக்கடாவாக விட்டு இந்தத் திட்டம் நுணுக்கமாக நிறைவேற்றப்படுகின்றது. பேராசையும், நாட்டு வளங்களைச் சுரண்டி தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் சொந்தமாக்கிக்கொள்ளும் மூதேவிகளான அரசியல்வாதிகள் இந்த நாட்டில் வாழும் காலமெல்லாம் இந்தத் திட்டத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மகோடிஸ்கள் தங்கள் பங்களிப்பை வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.

சிரியாவை இழந்ததர்கும் எமது நாட்டில் தேவாலயத்திர்கு சென்ஶ்ரீஅ அப்பாவிகளை கொன்றதர்கும் என்னடா சம்மந்தம்
இங்குள்ள அனைவரது நிம்மதியையும் இல்லாமமல் செய்துவிட்டாயே விரைவில் நாசமாகிவிடு எங்களை நிம்மதியாக வாழவிடு

அடேய் மெண்டல், அதுக்கு ஏன்டா அப்பாவி பொது மக்களை கொன்றாய்?

So, Israel is first time agreed them terrorist attacks in Sri Lanka.

Post a Comment