Header Ads



சஹ்ரான் பயன்டுத்திய ரி 56 ரக துப்பாக்கி - சாரதி வாக்குமூலத்தினால் வண்ணாத்திவில் ஆயுதங்கள் மீட்பு

புத்தளம் வண்ணாத்திவில்லு மங்களபுரவில் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் பொலிஸார்.

ரி 56 துப்பாக்கி ஒன்று , எம் எம் 9 ரக பிஸ்ரல் ஒன்று ,இரண்டு ரிவோல்வர்கள் ,5 ரவைகள் தென்னந் தோப்புஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. நேற்று மாலை இது நடந்துள்ளது.

காத்தான்குடியில் கைதான சஹ்ரானின் சாரதி ஷெரீப் ஆதம்லெப்பை வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

ஸஹ்ரான் பயன்படுத்தியது ரி 56 ரக துப்பாக்கி என சாரதி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பயிற்சி நடவடிக்கைகளுக்காக இந்த இடம் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை புத்தளம் கற்பிட்டி மணல்குண்டு பகுதியில் நடந்த தேடுதல் நடவடிக்கையின்போது 50 சிம் கார்ட்டுக்களை வைத்திருந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். TN

No comments

Powered by Blogger.