Header Ads



சின்னமன் + கிங்ஸ்பெரி ஹோட்டல்களில், தற்கொலை தாக்குதல் நடத்தியது 2 சகோதரர்களே

 தெமட்டகொட மஹவில கார்ட்டின் சொகுசு வீட்டில் நேற்று முன்தினம் இரு வெடிப்புக்கள் பதிவாகின. அதில் ஒன்று  பொலிச் அதிகாரிகள் மூவரை இலக்கு வைத்து  குண்டுத் தாக்குதல் எனவும் மற்றையது தற்கொலை குண்டுத் தாக்குதல் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. 

இதனிடையே வெடிப்பு இடம்பெற்ற குறித்த வீட்டின் உரிமையாளரின்  33 வயது மகனான இம்சான் மொஹம்மட் இப்ராஹீம், 31 வயதான இல்ஹாம் அஹமட் இப்ராஹீம்  ஆகியோரே சினமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை நடாத்தியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் அந்த ஹோட்டலில்  8 ஆம் மாடியில் 819 ஆம் இலக்க அறையில் தங்கிருந்தமை விசாரணையாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.  அதே போல் சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதல் தாரியின் பயணப் பாதையும் கண்டறியப்பட்டது. இதனை மையப்படுத்திய விசாரணைகளிலேயே அவர்கள் வந்த சொகுசு காரின் பயணப் பாதை தொடர்பில் சி.சி.ரி.வி. சாட்சிகளை அடிப்படையாக கொண்டே பொலிசார் மூவர் அவ்வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.

 தெமட்டகொடை வீட்டில் நடந்தது என்ன ?:

இதன்போதே   பொலிசார் அவ்வீட்டின் மேல் மாடியை சோதனை இடச் சென்ற போது கீழ் மாடியில் இருந்த நபர் ஒருவர் ரிமோர்ட் ஊடாக மெல் மாடியில் குண்டை வெடிக்கச் செய்து பொலிசாரை கொலை செய்துள்ளார் என சந்தேகிக்கபப்டுகின்றது.  இந் நிலையில் வீட்டு உரிமையாளரின் மகனான 30 வயதுடைய இஜாஸ் அஹமட் இப்ராஹீம்,  பொலிசாரால் கைது செய்யப்ப்ட்டுள்ள நிலையில்  அவரது இளைய சகோதரரான இஸ்மாயீல் அஹமட் இப்ராஹீம் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக அறிய முடிகின்றது. 

இந் நிலையில் அவ்வீட்டில் இடம்பெற்ற முதல் வெடிப்பின் பின்னர் பொலிஸ் அதிரடிப் படை வீட்டை சோதனையிடச் சென்றிருந்தது. இதன்போது அங்கிருந்த , செங்ரில்லா ஹோட்டல்  தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான இன்ஹாம் என்பவரின் மனைவி 25 வயதுடைய பாத்திமா ஜிப்றி மற்றும் இரு குழந்தைகளுடன் தற்கொலை  குண்டை வெடிக்கச் செய்ததாக நம்பபப்டுகின்றது. இக்குண்டு அவரால் வெடிக்கச் செய்யப்பட்டதா அல்லது அதுவும் ரிமோர்ட் கொன்ட்ரோல் ஊடாக வேறு ஒருவரால் இயக்கப்பட்டதா என்பது குறித்தும் அந்த விசாரணைகளில் அவதானம் வெலுத்தப்பட்டுள்ளது. 

 இந் நிலையிலேயே  இரு நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய சந்தேக நபர்களின் தந்தையான , தேர்தல் ஒன்றிலும் போட்டியிட்டுள்ள 65 வயதுடைய வர்த்தகர்  யூசுப் மொஹம்மட் இப்ராஹீம்  என்பவரையும் பொலிசார் கைதுசெய்தனர். 

இந் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை பல பகுதிகளிலும் மொத்தமாக 55 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

 நட்சத்திர ஹோட்டல்கள் மீதான  தாக்குதல்களின்  தற்கொலை குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் உருவத்தை சி.சி.ரி.வி. கமராவில் இருந்து கண்டுபிடித்து அவரையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

 எனினும் நீர்கொழும்பு, கட்டான - கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரியின் உருவம் அடங்கிய சி.சி.ரி.வி. காணொளியை வைத்து பொலிசார் தேடி  விசாரித்து வருகின்றனர். அத்துடன் கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய நபர் தொடர்பிலும் சி.ஐ.டி. நேற்றும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. 

தெஹிவளை சம்பவம்:

 இந் நிலையில் தெஹிவளை யில் இடம்பெற்ற வெடிப்பு தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு பொலிசார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில்,  குறித்த தங்குமிடத்தின் சேவையாளர்கள் சந்தேகத்துக்கு இடமான  இருவரை சோதனை செய்ய முற்பட்ட போது அவர்கள் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. எவ்வாறயினும் அது தொடர்பில் மூவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.