April 10, 2019

பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட 2 முஸ்லிம், இளைஞர்களை மீட்பதில் பங்காற்றிய 4 பேர்


காலம்: 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் எட்டாம் திகதி .  இடம்: புத்தளத்தில் இருக்கும் வனாத்த விழுவ பகுதி.

சம்பவம்: முஹம்மத் நபீஸ் முஹம்மத் நாப்ரித் (வயது 21), முஹம்மத் நபீஸ் முஹம்மத் நவீத் (வயது 19)ஆகிய இரண்டு மாணவர்கள் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கும் மாவனல்லை புத்தர் சிலையுடைப்பு விவகாரத்தில் கைதாகியிருக்கும் வேறு சில இளைஞர்களுக்கும் இடையில் நெருக்கமான உறவிருக்கிறது என்ற  சந்தேகத்தின் பெயரில் இவர்கள் கைதாகிறார்கள்.

தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில்  பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்படுகிறார்கள். நீதிமன்றம் மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்களை மூன்று மாதங்களுக்கு சிறையில் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அனுமதி அளிக்கிறது.

இன்று மாவனல்லை மாஜிஸ்ட்ரேட்  நீதிமன்றம் இந்த இருவருக்கும் பிரதி ஞாயிறு தோறும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமூகம் தரவேண்டும் என்றும், இவர்களின் முகவரியில் மாற்றங்கள் நிகழுமானால் அதனையும் உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையிலும்  விடுதலை செய்தது.

பயங்கரமான வெடி பொருட்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும்  இவர்களின் கைது பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன என்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இன்று மாவனல்லை நீதவான் நீதிமன்றம் இவர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்திருப்பதையும் உங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

பயங்கரவாத தடை சட்டம் என்ற பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நபர்களுக்கு பிணை மறுக்கப்படும்.  இந்த நபர்களுடன் தொடர்பு கொள்கின்ற அனைவரும் இலங்கை அரசின் பாதுகாப்புப் பிரிவினரின் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாவார்கள். அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் விஷேட உளவுப்பிரிவினால் வேவு பார்க்கப்படும். இத்தகைய சங்கடங்களுக்கு முகம் கொடுக்க யாருமே முன்வருவதில்லை. அதனால், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்களும்,ு அவர்களது குடும்பத்தினரும் நிர்க்கதியான நிலைக்கு ஆளாவார்கள். சமூகத்தை விட்டும் தனிமையாக்கப்படுவார்கள்.

இந்த இளைஞர்களின் நிலையும், குடும்பத்தாரின் நிலமையும்  இப்படியே ஆகிப்போனது. என்றாலும், சமூக நலனில் அக்கறை கொண்ட சிலரின் தன்னலமில்லா சேவையின் காரணமாகவே அப்பாவிகளான இந்த இளைஞர்களின் விடுதலை சாத்தியமானது. இலங்கை முஸ்லீம் சமூகத்தில் இருக்கின்ற துணிச்சல்மிக்க தனித்துவம் வாய்ந்த அந்த செயல்வீரர்கள்  யாராக இருக்கும் என்று அறிய உங்களுக்கும் ஆர்வமிருக்கும்.

இந்த இளைஞர்களின் விடுதலைக்கு களத்திலிறங்கி ஒருங்கிணைப்பாளராக வேலை செய்தவர்  சமூக சேவையாளர் சங்கைக்குரிய மிப்லால் மௌலவி.  மாணவர்களின் கைது சம்பந்தமான செய்தி கிடைத்தவுடன் இவர் உடனடியாக அந்தக் குடும்பத்தினரை சென்று சந்தித்து ஆறுதலாக இருந்திருக்கிறார். இவருக்குத் தேவையான உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹ்மான் செய்து கொடுக்கிறார். அரச உயர்மட்டத்தில் செய்ய வேண்டிய வேலைகளை மேல் மாகாண ஆளுநர் கௌரவ அஸாத்ஸாலி செய்து கொடுத்திருக்கிறார்.

வழமைபோலவே முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு சுயமாக முன்வந்து உதவுகின்ற சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் இந்த இளைஞர்களின் விடுதலைக்கு முக்கியமான காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார். இம்முறை அவருடன் நீதிமன்றில் அவருக்கு துணையாக சட்டத்தரணி சாஜித் முஹம்மத் இருந்திருக்கிறார்.

நண்பர்களே......நன்றியுடன் இவர்களை நினைத்துப் பார்ப்போம். எங்களது பிரார்த்தனைகளில் இவர்களையும் மறவாதிருப்போம்! இன்ஷா அல்லாஹ்.

Ahlulbaith

3 கருத்துரைகள்:

அல்ஹம்துலில்லாஹ் எம்முடைய ஒற்றுமைக்கான பலன். சிங்கள பேரினவாதிகளால் இன்னுமொரு கலவரத்திற்கு செல்ல முடியாமல் இருப்பதற்கான காரணமும் கடந்த காலங்களில் நாம் ஒற்றுமையாக முன்னெடுத்த நடவடிக்கைகள் தான்

மேட குறிப்பிட்ட இரு மாணவர்களின் விடுதலைக்காக உதவிய நீதி மன்றில் வாதாடிய சட்டத்தரினாள் உட்பட அனைவருக்கும் எம் சமூகத்தின் சார்பாக நன்றிகள் பல. அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக

உலகத்திலுள்ள முஸ்லிம் சமூகங்களில் இலங்கை முஸ்;லிம் சமூகத்திற்கு தனியான சிறப்பு இருக்கின்றது. அடிப்படையில் அவர்கள் யார் யாருக்கு என்ன தொழில் (மமம) கொடுத்தால் அதனைச் சிறப்பாக செய்வார்கள் என்ற அறிவு முதிர்ச்சி அவர்களிடம் நிறைய ???? உண்டு. அரசியலுக்கு இன்னன்ன ஆட்கள். போதை வஸ்த்து கடத்தல் விற்பனைக்கு இன்னன்ன ஆட்கள் கள்ளக் கடத்தல்களுக்கு இன்னன்ன ஆட்கள், அது மாதிரி முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய இன்னல் இடுக்கண்களைக் களைவதற்கு இன்னன்ன ஆட்கள். இவ்வாறு ஆட்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஒரு சின்ன உதாரணம். சிராஷ் நூர்தீன் அவர்கள் தன்னலமிக்க ஒருவர். நம்மட முஸ்லீம் சமூகத்திற்கு அவர்கள் எவ்வளவோ நன்மையான உருப்படியான காரியங்களை தம்முடைய சொந்தச் செலவில் செய்து முடித்திருக்கின்றார்கள். அதுக்காக வேண்டி நாங்க அவங்களுக்கு துஆவும் செய்ய மாட்டோம் நன்றியும் உள்ளத்தால் சொல்ல மாட்டோம். அவங்க வந்து தேர்தல் கேட்டாங்கன்னா தெரியும் இவங்களுக்கு முஸ்லிம் சமூகம் எவ்வளவு கண்ணியம் மரியாதை கௌரவம் கொடுத்து இருக்காங்கன்னு. திகாமடுல்ல மக்கள் மட்டுமல்ல முழு இலங்கை மக்களும் மாமனிதர் அஷ்ரப் அவர்கள் இன்னமும் மௌத் ஆக இல்ல. இன்னமும் அவங்கதான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருக்காங்கன்ட நெனப்போடவே இருக்காங்க. ஆயினும் இன்னமும் இரண்டொரு முஸ்லிம் தலைவர்கள் எம் மத்தியில் இல்லாமல் இல்லை. அவர்களுடைய கரங்களைப் பலப்படுத்த இன்னமும் பலர் தேவை. அவர்களை எப்படி உருவாக்குவது. இதற்குப் பதில் எங்கள் கைகளிற்றான் இன்னமும் இருக்கின்றது.

Post a comment