Header Ads



140 வருடங்களுக்கு பின்னர், இலங்கையில் அதிக வெப்பம்

140 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பத்துடனான வானிலை தற்போது நிலவுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பான புள்ளிவிபரங்களை ஆராய்ந்ததில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எல்நினோவின் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 30 வருடங்களில் காணப்பட்ட நாட்டின் சாதாரண வெப்பநிலையானது 2 முதல் 3 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மொனராகலை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
    (அல்குர்ஆன் : 24:43)

    ReplyDelete

Powered by Blogger.