March 06, 2019

சமூகப்பற்றுள்ள கல்வியியலாளர் MSAM முஹ்தார்

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாண சோனகத் தெருவைச் சேர்ந்த மாணிக்கலெப்பை என அழைக்கப்படும் சேகு அலாவுதீன் பாத்திமா நாச்சியா தம்பதியினருக்கு கனிஷ்ட புதல்வனாக 1948 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 07 ஆம் திகதி முஹ்தார் பிறந்தார். முஹ்தாருடைய வாப்பா மாணிக்கலெப்பை என அழைக்கப்படும் சேகு அலாவுதீன் அவர்கள் 111 வருடங்கள் பழைமை வாய்ந்த யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலையில் மாலை நேரத்தில் மாணவர்களுக்கு குர்ஆன் ஓதுவதற்கு கற்பித்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முஹ்தார் தனது ஆரம்பக் கல்வியை ஐந்தாமாண்டு வரை மஸ்ற உத்தீன் பாடசாலையில் கற்றார். அதன் பின்னர் ஆறாமாண்டு தொடக்கம்; போராதனை பல்கலைக்கழகத்திற்;கு செல்லும் வரை முஹ்தார் யாழ.; வண்ணைவைத்தீஸ்வராக் கல்லூரியில் கற்றார். கல்வி மாணித்துறைக்கு தெரிவாகி போராதனை பல்கலைக்கழகத்தில் கல்வியைக் கற்க ஆரம்பித்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முஹ்தார் 1967 இல் பிரதம ஆசிரியராக இருந்து முஸ்லிம் மஜ்லிஸ் சார்பாக ஒரு சஞ்சிகையை வெளியிட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த அனுபவம் முஹ்தாருக்கு 2015 இல் வெளியிடப்பட்ட ஜே.எம்.ஆர்.ஓ. இன்'யாழ் முஸ்லிம் வரலாற்றுப் பார்வை' எனும் மலரை வெளியிடுவதற்கு, மலராக்க குழு தலைவராக செயற்படுவதற்கு உதவியாக இருந்தது என்றால் மிகையாகாது.

முஹ்தார் 1970 இல் 'கல்விமாணி' சிறப்புப் பட்டதாரியாக சித்தியடைந்தார். 1971 இல் முஹ்தார்மாவனெல்லையில், ஆசிரியர்களுக்கான வெளிவாரிப் பரீட்சை ஆயத்த வகுப்புக்களுக்கான பிரத்தியேகமாக 'அதீனா அகடெமி' யை ஆரம்பித்து வகுப்புக்களை நடாத்தினார். சேகுவேரா பிரச்சினை காரணமாக இடைநிறுத்திவிட்டு சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினார்.

1971 நடுப்பகுதியளவில் முஹ்தார் யாழ.; றிம்மர் மண்டபத்தில் பிரத்தியேகமாக க.பொ.த. (உஃத) மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார்.

1972 இல் முஹ்தாருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் பேசாலை பத்திமா மகா வித்தியாலயத்தில் நியமனம் கிடைத்தது.

1974 இல் மார்ச் மாதம் தொடக்கம் 6 மாதகாலத்திற்கு தாராபுரம், அல்மினா மகா வித்தியாலயத்தில் தேவையின் பொருட்டுபதில் அதிபராக கடமையாற்றினார். திரும்பவும் முஹ்தார் பேசாலைபத்திமா மகாவித்தியாலயத்தில் கடமையைப் பொறுப்பேற்று 1981 மேமாதம் வரைபட்டதாரி ஆசிரியராக கடமையாற்றினார்.

26.06.1976 இல் முஹ்தார், அல்லாஹ் பிச்சைபள்ளி முகாமையாளர் ஸதக்கத்துல்லாஹ் அவர்களுடைய மகள் யஸ்மினைத் திருமணம் செய்தார். முஹ்தார் யஸ்மின் தம்பதியினர் முத்தான இரு பிள்ளைகளான முஜாஹிரா, றினோஸா ஆகியோரைப் பெற்றெடுத்தனர்.

1974, 1975 ஆகிய இரு வருடங்களிலும் முஹ்தார், முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக செயற்பட்டு க.பொ.த (சாஃத) வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாகசனி, ஞாயிறுகளில் ஒவ்வொரு வாரமும் மாறி, மாறி மீரானியா கல்லூரி மஸ்ற உத்தீன் பாடசாலை, மன்ப உல் உலூம் பாடசாலை,கதீஜா ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளில் சிறந்த ஆசிரியர்களால் வகுப்புகள் நடாத்திக.பொ.த (சாஃத) மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவினார்.

1981 மேமாதம் அளவில் முஹ்தார் தான் கல்வி கற்ற பாடசாலையான யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு பட்டதாரி ஆசிரியராக இடமாற்றப்பட்டார். யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரியில் முஹ்தார் க.பொ.த (உஃத) வகுப்பு மாணவர்களுக்கு அளவையியல் பாடத்துடன் பொருளியல் பாடமும் கற்பித்தார்.

1986 இல் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் எஸ்.எம். சுல்த்தான் அவர்கள் தலைவராக செயற்பட்ட சமாதான சபையில் முஹ்தார் செயலாளராக செயற்பட்டார்.

முஹ்தார் 1986 இல் கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து 01.06.1987 இல் கல்வி நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 

முஹ்தார் 1987 செப்டெம்பரில் யாழ்.வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியிலிருந்து யாழ். ஒஸ்மானியாவுக்கு இடமாற்றப்பட்டார்.

முஹ்தார் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். தகுதி பெற்றதால் உதவி கல்விப் பணிப்பாளராக அல்லது ஒரு கல்லூரியின் அதிபராகவே நியமனம் பெற்றிருக்க வேண்டும்

ஆனால் முஹ்தார் ஒஸ்மானியா மீது நல்லெண்ணம் கொண்டும் அதிபர்ஏ.எச். ஹாமீம் அவர்களது நிர்வாகத் திறமையையும் ஏற்றுக் கொண்டும் புரிந்துணர்வுடன், நல்லெண்ணத்துடன் கௌரவமாக ஒஸ்மானியா கல்லூரியின் பிரதி அதிபர் கடமையை கல்வி திணைக்களத்தில் சம்மதக்கடிதம் கொடுத்து ஏற்றுக் கொண்டார். எஸ்.எல்.ஈ.ஏ.எஸ் தகுதி கிடைத்தால் பொதுவாக அதிபராகவே கடமையாற்றுவார்கள் முஹ்தார் பிரதி அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

முஹ்தார் 1990 ஒக்டோபர் இடம் பெயர்வுவரை யாழ்.ஒஸ்மானியா கல்லூரி பிரதி அதிபராக கடமையாற்றினார்.  இடம் பெயர்வின் பின் முஹ்தார் 1990 நவம்பரில் மள்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் அதிபரானார்.1993 நவம்பரில் அல்முபாரக் தேசிய பாடசாலையின் பொருட்காட்சி, பாடசாலை சஞ்சிகை வெளியீடு, பரிசளிப்புவிழா போன்றவை நான்கு நாட்களாக விழாவாகக் கொண்டாடிய நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்த இந்த விழாவை அதிபர் முஹ்தார் சிறப்பாக வழிநடத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும். முஹ்தார் மள்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் அதிபராக இருந்த காலம் பொற்காலம் என மள்வானை மக்கள் கூறுகிறார்கள்.

1995இல் முஹ்தார் மேல் மாகாணத்தின் கல்விக் காரியாலயத்தில் உதவிக் கல்விப்பணிப்பாளரானார். மேல் மாகானத்திலுள்ள சகலதமிழ் மொழிப் பாடசாலைகளினதும் விடயங்களுக்குப் பொறுப்பாக செயற்பட்டார்.

1996 இல் முஹ்தார் பிலியந்தலை வலயத்தில் தமிழ் மொழிப் பிரிவிற்கு பொறுப்பான பணியாளராக நியமனம் பெற்றார். இக்காலத்தில் உலக வங்கி புலமைபரிசில் திட்டத்தில் முஹ்தார் தெரிவு செய்யப்பட்டு புதுடெல்லி சென்று 06மாதகால பயிற்சியின் போது கல்விநிர்வாகம், திட்டமிடல் விடயங்களில் உயர் டிப்ளோமா சித்தியடைந்தார்.

1997 இல் கல்வி நிர்வாக சேவையின் தரம் உயர்வு பெற்று மேல்மாகாணத்தின ,பிரதிக் கல்விப் பணிப்பாளரானார். 1998 இல் முஹ்தார் அகில இலங்கை சமதான நீதிவான் நியமனம் பெற்றார். முஹ்தார் 2000 ஆம் ஆண்டு ஹஜ்ஜு செய்து முஹ்தார் ஹாஜியாரானார். 2001 இல்  முஹ்தார் மேல் மாகாண கல்வித் திணைக்களத்தில் தமிழ் மொழிப் பிரிவுக்கு பொறுப்பாக நியமனம் பெற்றார். ஆசிரிய ஆலோசகர்களுக்கு விரிவுரையாளராக கடமையாற்றினார். 2005,2006 களில் முஹ்தார் மேல் மாகாணத்தின் இணைப்பாளராக செயற்பட்டார்.07.07.2008 இல் முஹ்தார் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஒரு வருடம் முஹ்தார் சேவையாற்றினார்.

37 வருடகாலம் பட்டதாரி ஆசிரியர், பதில் அதிபர், பிரதி அதிபர், அதிபர், மேல்மாகாண கல்வி காரியாலயத்தில் உதவி கல்விப் பணிப்பாளர், மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்களுக்கான விரிவுரையாளர் மேல் மாகாணத்தின் கல்வி சம்பந்தமான விடயங்களுக்கான இணைப்பாளர் போன்ற பதவிகளில் திறம்பட உழைத்தார்.

க.பொ.த. (சாஃத) சித்தியடைந்து உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் குழுவான'அவ்ன்' நிறுவனத்தில் முஹ்தார் ஓர் அங்கத்தவராக செயற்படுகின்றார். 

2017 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்ட நூலாக்கக் குழுவில் முஹ்தார் ஒரு செயற்குழு உறுப்பினராக விருந்து' சுதந்திர இலங்கையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள்' எனும் பகுதிக்கு பொறுப்பாக இருந்து திறம்பட உழைத்தார்.

சமூகப்பற்றுள்ள கல்வியியலாளர் எம். எஸ். ஏ. எம்.முஹ்தார் 70 வயது கடந்த நிலையில் மனைவியுடன் இரத்மலானையில் வசித்து வருகிறார். அல்லாஹ்வின் அருளால் நோயின்றி நீடூழி வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

1 கருத்துரைகள்:

கல்வியாளரும் ,சமூகப்பற்றாளருமான முஹ்தார் அவர்களைப்
பற்றி , மிகச்சிறப்பான முறையில் ஆய்வுசெய்து
எழுதியுள்ள பரீட் இக்பால் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.பரீட் இக்பால் அவரது ஆக்கங்களை தொகுத்து வெளியிடுவது பயனுள்ளதாக அமையும்.
.

Post a comment