Header Ads



ஜனாதிபதியின் அசிங்கமான மறுபக்கம் - அம்பலப்படுத்தும் ஆங்கில ஊடகம்


முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டார் என  கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தன்னை கைதுசெய்வதற்கு எதிராக  சமர்ப்பித்திருந்த அடிப்படை உரிமைமீறல் மனு கடந்த ஏழாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக சிறிசேன சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறையினர் மீது தனது அதிகாரத்தை பயன்படுத்தினார் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டமொழுங்கு அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சொலிசிட்டர் ஜெனரல் டபுல டி லிவெர வசந்த கரணாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கப்படவுள்ளமை உட்பட அனைத்து விபரங்களையும் தெளிவுபடுத்தினார் என தகவல்கள் கிடைத்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது

இதன் போது தான் நீதிக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை என சிறிசேன சொலிசிட்டர் ஜெனரலிடம் தெரிவித்துள்ளார் எனவும் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது

இதன் பின்னர் மார்ச் ஆறாம் திகதி வசந்த கராணகொட சார்பில்  இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர்களான டிரான் அலசும் டிலித் ஜெயவீரவும் ஜனாதிபதியை சந்தித்தனர் என தெரிவித்துள்ள கொழும்பு டெலிகிராவ் இவர்கள் இருவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது டிரான் அலசும் டிலித் ஜெயவீரவும் சிஐடியினர் வசந்த கரணாகொடவை கைதுசெய்வதற்கு அனுமதிக்கவேண்டாம் என மன்றாடியுள்ளனர் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது

வசந்த கரணாகொட கைதுசெய்யப்பட்டால் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூர தன்மை காரணமாக அவரிற்கு பிணைகிடைக்காது என இருவரும் சிறிசேனவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களிடம் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இது குறித்து பேசுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இவர்களை சந்தித்த பின்னர் சட்டமா அதிபரை தொடர்புகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசந்தகரணாகொடவை கைதுசெய்யவேண்டும் என வற்புறுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளார் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. அட நானும் தலைப்பையும் படத்தையும் பார்த்ததும் ஜனாதிபதி நாய்க்கு எதோ அசிங்கமாக பண்ணிட்டாரோன்னு நெனச்சேன்

    ReplyDelete
  2. Well done Mr President.

    ReplyDelete

Powered by Blogger.