Header Ads



திருமணம் செய்வதற்காக, கடன் வாங்கவுள்ள நாமல்

இந்த வருடம் திருமணம் செய்யும் இளம் ஜோடிகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஹோம் ஸ்விட் ஹோம் கடன் திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று -07- நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா உரையாற்றிக்கொண்டிருந்த போது அவரிடம் கேள்வி எழுப்பி, நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

இந்த கடன் திட்டத்திற்கான மாத தவணை கட்டணம் எவ்வளவு என நாமல் வினவினார். அப்போது ராஜாங்க அமைச்சருக்கும் அவருக்கும் இடையில் இந்த உரையாடல் ஏற்பட்டது.

நாமல் ராஜபக்ச - ஹோம் ஸ்விட் ஹோம் கடனை நானும் இந்த வருடம் பெற எதிர்பார்த்துள்ளேன். அதற்கான மாத தவணை கட்டணம் எவ்வளவு என்று அறிந்துக்கொள்ள முடியுமா?.

ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா - 6 வீதம் வட்டி, 25 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். நாமல் ராஜபக்ச - நான் தவணை கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன்.

நிரோஷன் பெரேரா - தவணை கட்டணம் எவ்வளவு என்று என்னால் கூற முடியாது. நீங்கள பெறப் போகும் தொகைக்கு அமைய கணக்கிட்டு பாருங்கள். உங்களுக்கு பிணை கொடுக்க அப்பா இருக்கிறார் தானே பயப்பட வேண்டாம்.

நாமல் ராஜபக்ச - இளைஞர்களுக்கு வீடு கட்ட கடன் கொடுப்பது நல்லது. அந்த கடனை பெற குறைந்தது ஒரு லட்சம் ரூபாயாவது சம்பளம் பெற வேண்டும். மாதம் 64 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். வட்டி 6 வீதம் எனக் கூறுகின்றீர்கள். அப்படியானால், மீதமுள்ள வட்டியை எப்படி கட்டுவது. மக்களின் பணத்தில்தான் அதனை செலுத்த வேண்டி வரும் எனக் கூறினார்.

1 comment:

  1. உலகிலேயே மாபெரிய கள்ளனும் பயங்கர பணக்காரனுமான இவன் போன்ற பேயனுடைய கதைகளை வீணாக பிரசுரித்து வாசகர்களின் அருமையான நேரத்தை வீணாக்காதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.