Header Ads



சாய்ந்த‌ம‌ருது பள்ளிவாசலிடம், சவால் விடுக்கிறோம்...!

சாய்ந்த‌ம‌ருதையும் க‌ல்முனையையும் நேசிக்கும் ஒருவ‌ன் நிச்ச‌ய‌ம் சாய்ந்த‌ம‌ருது க‌ல்முனையிலிருந்து த‌னியாக‌ பிரிய‌க்கூடாது என்றுதான் சொல்வான் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

க‌ல்முனை ச‌ம்ப‌ந்த‌மாக‌ க‌ல்முனைக்காரியால‌ய‌த்தில் ந‌ட‌ந்த‌ க‌ல‌ந்துறையாட‌லில் அவ‌ர் மேலும் குறிப்பிட்ட‌தாவ‌து,

க‌ல்முனை ப‌ல‌ ஊர்க‌ளையும் கொண்டு இணைந்திருக்கும் போது இருக்கும் முஸ்லிம் உம்ம‌த்தின் ப‌ல‌ம் பிரியும் போது நிச்ச‌ய‌ம் குறையும்.

இன்று உல‌க‌ளாவிய‌ முஸ்லிம் நாடுக‌ள் ஒரு ஆட்சியில் இருந்து யூத‌ர்க‌ளின‌தும் ஐரோப்பாவின‌தும் ச‌தித்திட்ட‌ம் கார‌ண‌மாக‌ ப‌ல‌ நாடுக‌ளாக‌ பிரிந்த‌த‌ன் விளைவை க‌ண்ணூடாக‌ காணும் நாம் சாய்ந்த‌ம‌ருது பிரிவ‌தை ஒரு போதும் ஏற்க‌ முடியாது.

பிரிவ‌து என்ப‌து பிரிப‌வ‌ருக்கு சுக‌மாக‌ தெரியும். கூட்டுக்குடும்ப‌த்திலிருந்து ம‌க‌ன் ச‌ண்டை பிடித்துக்கொண்டு பிரியும் போது ம‌க‌னுக்கு ம‌கிழ்ச்சியாக‌த்தான் இருக்கும். பிரிப்புக்கும் ப‌ல‌ தீய‌ உள்ள‌ங்க‌ள் துணை போக‌த்தான் செய்யும்.

ஆனால் கால‌ப்போக்கில் பிரிவின் வேத‌னை தெரிய‌ வ‌ரும். அப்போது முழு குடும்ப‌மும் பாதிக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

க‌ல்முனையில் இன்னொரு ச‌மூக‌த்தின் கெடுபிடிக‌ள் இல்லாவிட்டால் சாய்ந்த‌ம‌ருது த‌னியாக‌ பிரிவ‌தில் பிர‌ச்சினையில்லை. ஆனால் இன்றிருக்கும் நிலையில் சா. ம‌ருது த‌னியாக‌ பிரிவ‌து ச‌மூக‌த்தின் எதிர்கால‌த்துக்கு ந‌ல்ல‌த‌ல்ல‌.

1985 த‌மிழ் முஸ்லிம் கல‌வ‌ர‌ம் அக்க‌ரைப்ப‌ற்றில் ஆர‌ம்ப‌மாகி சாய்ந்த‌ம‌ருதில்தான் சூடேறிய‌து. அவ்வேளை சாய்ந்த‌ம‌ருதை காக்க‌ க‌ல்முனைக்குடி முஸ்லிம்க‌ள் உயிர் கொடுத்து போராடின‌ர். இத‌ன் விளைவாக‌ க‌ல்முனை தாக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌னை முறியடிக்க‌ சாய்ந்த‌ம‌ருது வாலிப‌ர்க‌ளும் ஓடோடி வ‌ந்த‌தை நாம் ம‌ற‌க்க‌ முடியாது.

க‌ல்முனையை 1987ம் ஆண்டு இருந்த‌து போல் அதே எல்லைக‌ள், அதே பெய‌ர்க‌ளைக்கொண்டு நான்காக‌ பிரிக்கும்ப‌டி சாய்ந்த‌ம‌ருது ப‌ள்ளிவாய‌ல் போராட்ட‌ம் ந‌ட‌த்தினால் மிக‌ இல‌குவாக‌ சாய்ந்த‌ம‌ருதுக்கும் ச‌பை கிடைக்கும். 

ஆனால் இத‌ற்கு சா. ம‌ருது த‌யாராக‌ இல்லை. கார‌ண‌ம் இவ்வாறு கோரிக்கை விடுத்தால் அது கோடீஸ்வ‌ர‌ன் எம் பிக்கும் த‌மிழ் கூட்ட‌மைப்புக்கும் பிடிக்காது என்ப‌து போல் சா. ம‌ருது ப‌ள்ளியின் ந‌ட‌வ‌டிக்கை உள்ள‌து. 

அவ்வாறு க‌ல்முனையை நான்காக‌ பிரிக்காம‌ல் சா. ம‌ருது த‌னியாக‌ பிரிந்தால் க‌ல்முனையில் உள்ள‌ முஸ்லிம்க‌ளின் நில‌ங்க‌ளும் மிக‌ இல‌குவாக‌ ப‌றிபோகும் என்ப‌தால் சா. ம‌ருது ச‌பை பிரிவ‌தை த‌மிழ் கூட்ட‌மைப்பு வெளிப்ப‌டையாக‌ ஆத‌ரிக்கிற‌து.  

"க‌ல்முனையை 1987ல் இருந்த‌து போல்  நான்காக‌ பிரிக்க வேண்டும் " என‌ சாய்ந்த‌ம‌ருது ப‌ள்ளிவாய‌ல் ப‌கிர‌ங்க‌ கோரிக்கை விடுக்குமாயின் நிச்ச‌ய‌ம் அந்த‌ப்போராட்ட‌த்துக்கு நாம் பூர‌ண‌ ஆத‌ர‌வு த‌ர‌ த‌யார். இவ்வாறான‌ போராட்ட‌த்துக்கு த‌யாரா என‌ நாம் சா. ம‌ருது ப‌ள்ளிவாய‌லிட‌ம் ஒரு ச‌வாலாக‌வே கேட்கிறோம். இல்லையென்றால் சா. ம‌ருதுக்கு ம‌ட்டும் ச‌பை என்ப‌த‌ன் பின்னால் முஸ்லிம்க‌ளின் ஒற்றுமையை விரும்பாத‌ ச‌க்திக‌ளே உள்ள‌ன‌ என்ப‌தே உண்மை.

ஆக‌வே பிரிந்தால் நான்காக‌ அல்ல‌து மூன்றாக‌ பிரிய‌லாம். ஆனால் த‌ய‌வு செய்து சாய்ந்த‌ம‌ருதை ம‌ட்டும் என‌ பிரித்து இந்த‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் இத‌ய‌த்தை சிதைத்து விட‌ வேண்டாம் என‌ ச‌க‌ல‌ரையும் கேட்டுக்கொள்கிறோம்.

4 comments:

  1. 1987இன் படி சம்சம் மில் வரை இருந்த எமது எல்லையை தர முடியும் என்று கூற முடியுமா என சாச்சாவுக்கு சவால் விடுகிறோம்

    ReplyDelete
  2. சாய்ந்தமருது பிரிபடுவது பற்றியும்,கல்முனை நாலாக பிரிய வேண்டும் என்பது அல்லது கல்முனை பிரியக்கூடாது என்பது பற்றிய முபாறக்
    மௌலவியின் கருத்துக்களுக்கு அவர்
    கூறும் விளக்கம் முழுக்க முழுக்க இன
    வாதமும் பிரதேச வாதமும் கலந்ததாகவே உள்ளது.இது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்லாமல் கண்டிக்கத்தக்கது.ஏனென்றால் இவர்
    ஒரு மௌலவியாக இருந்து கொண்டு
    இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது இஸ்லாம் பற்றிய கணிப்பு ஏனய மதத்தவர்கள் மத்தியில்
    தவறாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக
    அமைகிறது.இஸ்லாம் இன,மத,பிரதேச,
    சுயநல வாதங்களுக்கு அப்பால் மனித
    நேயத்திற்கும்,மனிதாபிமானத்திற்கும், நீதி நேர்மைக்கும் பொதுநலம் பேணல்
    போன்ற விடயங்களை உள்ளடக்கியதான எல்லா மனிதர்களும்
    சமமான கண்ணோடத்தில் பாரபட்சமற்ற முறைமையில்,அவன் தனிமனிதனாக இருந்தாலும்,குடும்பமாக,சமூகமாக வாழ்ந்தாலும் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகிறபோது முபாறக் மௌலவி அவர்கள் இங்கு
    தன்கருத்துக்களால் இஸ்லாத்தை
    படித்த அவர் தன்னுடைய சுயநல அரசியலுக்காக இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைக்க வழிசமைக்கிறார்.அதற்கு நாம் ஆதரவழிக்க முடியாது.
    கல்முனை விவகாரம் வெறும் இன,மத
    பிரதேசவாத கருத்துக்களால் அரசியல்
    வாதிகளாலும் சமயக்குரவர்களாலும்
    ஆங்காங்கே கூக்குரலிட்டு கொக்கரிப்பதன் மூலம் தீர்க்க முடியாது
    அப்படி தீர்க்கபட்டாலும் அங்கு மக்கள்
    சுமூகமாக ஒற்மையாக வாழ்வார்களா
    என்பது ஒருகாலும் நடைபெறாது.
    எனவே இப்பிரச்சினையை கையிலுடுத்துள்ளவர்கள் நல்ல சிந்தனையோடு நாம் ஏற்கனவே கூறிய
    நல்லறத்தோடு அணுகி ஆராய்ந்தால்
    தெளிவுபெறலாம் என்பது எம்போன்றவர்களின் தாழ்மையான
    அபிப்பிராயமாகும்.

    ReplyDelete
  3. ​செய்திகளைப் பிரசுரித்தாலும், தயவுசெய்து வாசகர்களின் நலன்கருதி இந்த நபரின் போடோவை இங்கு பிரசுரிக்க வேண்டாம். இது பெரும்பாலான வாசகர்களின் வேண்டுகோள்.

    ReplyDelete
  4. கிழக்கில் வாழும் muslims & Tamils இரு சாராரும் மொழி ரீதியாய் ஒன்றுபட்டு சுமுகமாய் வாழ்வதே சிறந்த தீர்ப்பாகும், 30 வருட போரினால் north east மக்கள் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்து இன்னும் அவல நிலை மாறாமல் இருப்பது எவருக்கும் எந்த நன்மையும் தராது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

    ReplyDelete

Powered by Blogger.