March 02, 2019

எம்மை முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்துள்ளார்கள் - எமது அரசாங்கத்தில் அதிகூடிய மத சுதந்திரம் வழங்கப்படும்


அடுத்து அமையவுள்ள எமது அரசாங்கத்தில் இந்நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் இதற்கு முன்னர் இருந்ததை விடவும் அதிகூடியளவு மத சுதந்திரம் வழங்கப்படும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் கௌரவமான முறையில் வாழக்கூடிய சூழலை இந்நாட்டில் ஏற்படுத்துவோம். இந்த அரசாங்கம் எம்மை முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்துள்ளது.

கடந்த காலத்தில் இந்த நாட்டில் பாதாள உலகத்தை இல்லாமல் செய்து சமாதானத்தை ஏற்படுத்தும் போதும், ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதும் எம்மீது கதைகளைச் சோடித்து விட்டனர் எனவும் அவர்  கூறினார்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 72 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினை, முஸ்லிம் மக்களின் பிரச்சினை என தொடர்ந்தும் கதைத்து வருகின்றோம். உண்மையில் பிரச்சினை இருப்பது, சிங்களவரா?  தமிழரா? முஸ்லிமா? என்பதில் அல்ல.

மாறாக எமது நாட்டுப் பிரஜைகளுக்கு வாழ்வதற்குத் தேவையான பொருத்தமான வருமானம் இருக்கின்றதா? தமது பிள்ளைகளுக்கு படிப்பதற்கு சிறந்த பாடசாலை இருக்கின்றதா? தகுதியான தொழில் ஒன்று இருக்கின்றதா? சுகாதாரம இருக்கின்றதா? தான் வாழ்வதற்கு ஒரு வீடு மற்றும் சூழல் காணப்படுகின்றதா? என்பதுதான் உண்மையான பிரச்சினைகள் ஆகும். இவற்றுக்குத் தீர்வு காண்பதன் மூலமே மக்களின் பிரச்சினை தீரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“எளிய” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். 

4 கருத்துரைகள்:

எமது முன்னோர்கள் எமக்கு ஆரோக்கியமான உணவுகளையும் குறிப்பாக பிரதான உணவாக சோற்றையும் அறிமுகப்படு்தினார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகளும் மகோடிஸ்மார்களும் அவர்களின் அடிவருடிகளும் தொடர்ந்தும் காலாகாலமாக எமக்கு குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்களுக்கு புல்லையும் புண்ணாக் கையும் புகற்றிவந்திருக்கின்றார்கள். குறிப்பாக தேர்தல்கள் வரும் போது முஸ்லிம் கிராமங்கள் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நகரங்களை நோக்கி புல் கட்டுக்கட்டாகவும் வாகனங்களில் ஏற்றப்பட்டும் வரும். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அந்த புல்லை விரும்பியோ பலவந்தத்தின் பேரிலோ திண்ணப்பழகிவிட்டார்கள். இந்த புல் திண்ணும் சமூதாயமாக சோனக அல்லது முஸ்லிம்கள் என்ற சமூகம் உறுதிப்படுத்தப்பட்டபின் மேலே வரும் பயங்கர திட்டமிட்டு இந்த நாட்டிலிருந்து முஸ்லிம்களைக் கொன்றொழித்து,அவர்களின் சொத்துக்களை அழித்து பெறுமதியானவற்றை தானே சுரண்டி உள்வாங்குவதில் மிகவும் அனுபவம் உள்ள இவன் போன்ற காபிர்கள் இனியும் முஸ்லிம்களுக்கு புல்லையும் புண்ணாக்ைகயும் புகட்டி அவர்களின் இருப்பை இல்லாமல் செய்ய இனிமேலும் இடமளிக்கக் கூடாது என நாம் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் மகனிடமும் மிகவும் பணிவாகவும் சீரியஸாகவும் கேட்டுக் கொள்கின்றோம். இந்த நாட்டு முஸ்லிம்களிடமிருந்து கொள்ளையடித்த பில்லியன் கணக்கான பணமும் சொத்துக்களும் இந்த ஆளிடம் தாராளமாக இருப்பதால் அவற்றைக் கொண்டு புல்லையும் புண்ணாக்ைகயும் அவர்களுக்கு கப்பல்கள் மூலம் பங்கிடும் ஆற்றல் இந்த ஆளுக்கு இருக்கின்றது. புலிகளிடம் கொள்ளையடித்த பல கப்பல்கள் இந்த இனவாதிகளின் பெயரில் ஐரோப்பாவிலும் ஏனைய பகுதிகளிலும் இன்னமும் ஓடிக் கொெண்டிருக்கின்றன.

உங்கள் ஆட்சியில் மத சுதந்திரம் இருந்ததால் தான் முஸ்லிம்கள் ஆதி உதை பட்டார்கள்

10000%our country people Nature we will forgot the past within 6months.

In a recent wedding ceremony in California, according to a reliable sources, Somebody has heard as Gota saying “if I become president of Sri Lanka, I will keep the Muslim Community in Sri Lanka as Jews are treating Palestins Arabs in Isreal”.

So take care everybody.

Post a comment