Header Ads



அல்குர்ஆனை எடுத்துச்செல்லாத பொறுப்பை, முஸ்லிம்களே ஏற்கவேண்டும் - விரிவுரையாளர் சர்வேஸ்வரன்

உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மன்ஸூர் எழுதிய “குர்ஆனிய சிந்தனை - ஜூஸ்உ அம்ம விளக்கவுரை (ஸூரா அஃலா முதல் அல் பய்யினா வரை) நூல் வெளியீடு 18.03.2019 மாலை இலக்கம் 114, விஜேராம மாவத்தையில் நடைபெற்றது.

உள்நாட்டுத் இறைவரித் திணைக்கள ஆணையார் அஷ்ஷெய்க் என்.எம்.எம். மிப்லி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் என்.செல்வகுமாரனும், கௌரவ அதிதியாக சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும், விஷேட அதிதியாக கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நூல் அறிமுகத்தை அஷ்ஷெய்க் அறபாத் கரீம் வழங்க, நூல் பற்றிய கருத்துரையை கொழும்புப் பல்கலைக் கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஸ்வரன் நிகழ்த்தினார்.

மிக இலகுவான நடையில் படிக்கும் எல்லாத் திறத்தினரும் புரியும் நடையில் நூல் எழுதப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குர்ஆன் ஏனைய சமூகத்தினர் மத்தியில் எடுத்துச் செல்லப்படாமைக்கான பொறுப்பை முஸ்லிம்களே ஏற்க வேண்டும் என்றார்.

மாலை 6.45க்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 9.00 மணிக்கு நிறைவுற்றது. சபை நிறைந்த ஓர் அழகிய நிகழ்வாக இருந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்.

Ashroff Shihabdeen


1 comment:

  1. wow nalla karuthu. ippodhu thinni pandaram ilangai muslimgaluku iniyawadhu moolai welaisaihindradha andru parpom.

    ReplyDelete

Powered by Blogger.