Header Ads



முஸ்லிம்கள் பற்றி எதுவுமில்லை - இலங்கை பற்றி ம.உ. ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி விசாரணை செய்வது குறித்து மனித உரிமை பேரவை ஆராயவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கேட்டுக்கொண்டுள்ளார்

இலங்கை தொடர்பான தனது அறிக்கையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

2015 இல ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதன் மூலம் இலங்கை கடந்தகால சம்பவங்களிற்கு தீர்வை காண வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை நோக்கிய தீர்க்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை,என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையாளர் இதன் காரணமாக பரந்துபட்ட அதிருப்தி நிலவுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்

போதிய முன்னேற்றம் ஏற்படாதது , இலங்கை நிலவரம் தொடர்ந்தும் ஐநா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சிநிரலில் நீடிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது எனவும் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்;பாடல்களை பேணுமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை கேட்டுக்கொண்டுள்ள  மனித உரிமை ஆணையாளர் இலங்கை நிலவரத்தை தொடர்ந்தும் கண்காணிக்குமாறும் கேட்டுக்ககொண்டுள்ளார்.

இலங்கையி;ல் இடம்பெற்ற சித்திரவதைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல்,யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி விசாரணை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டால் அதனை முன்னெடுக்குமாறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நம்பகதன்மை மிக்க உள்ளுர் பொறிமுறைகள் காணப்படாத பட்சத்தில் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதற்காக ஏனைய வழிமுறைகளை ஆராயுமாறும் மனித உரிமை ஆணையாளர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரத்தை கண்காணிப்பதற்காக முழுமையான அலுவலகத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைப்புவிடுக்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்செலெட் பரிந்துரை செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.