Header Ads



பிரச்சார பீரங்கியாக பசில்...?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததன் பின்னர், மூன்று மாதங்களுக்குள் புதிய ஒரு கட்சியை உருவாக்கித் தேர்தலில் போட்டியிட்டு பாரிய வெற்றியை பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டது.

340 பிரதேச சபைகளில் 231 சபைகளைப் பொதுஜன பெரமுன வெற்றிகொண்டது.

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றதன் பின்னர் இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் 12 தேர்தல்களுக்குப் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக செயற்பட்ட பசில் ராஜபக்ஷ அதில் 11 தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளார்

இதற்கமைய 2010 ஜனாதிபதி தேர்தல், 2008, 2009, 2012, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல், 2006, 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிரதேச சபை தேர்தல்களில் பசில் ராஜபக்ஷ பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.