Header Ads



அம்ஹர் மௌலவி, முஸ்லிங்களுக்கான ஒரு பெறுமதிமிக்க சொத்தாக அவர் மாறுவாரா..?

பேஸ்புக் எங்கும் "Talk with chathura" வில் பேசிய அம்ஹர் மௌலவியைப் பற்றிய புகழாடலே.. பலர் அவரின் புத்தி சாதூர்யத்தைப் போற்றிப் புகழ்ந்திருந்தாலும், ஒருசிலர் வழமை போல குறைகண்டும் இருந்தனர்.

என்னைப் பொறுத்தவரை அம்ஹர் மௌலவியை இப்போதைக்குக் கொண்டாடித்தான் ஆக வேண்டும். இதுவரைக்கும் இந்த இனவாத சக்திகளை முறியடிக்க ஜம்இயதுல் உலமாவோ, ஏனைய சில இயக்கங்களோ முன்னின்றும், எட்டிப் பிடிக்க கஷ்டப்பட்ட கடினமான ஒன்றை இவர் சற்றேனும் எட்டி விட்டார் என்பது அந்த நிகழ்ச்சியின் பின்னர் பிற மதத்தவர்களிடமிருந்து social mediaக்களில் வந்த பின்னூடல்களே காட்டிச் செல்கின்றன.

இஸ்லாத்தைப் பிற மதத்தவர்களிடம் கொண்டு செல்வதற்கு முன்னர் இஸ்லாம் மற்றும் முஸ்லீங்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டும். அதாவது ஒரு கட்டடத்தை எழுப்ப முன்னர் முதலில் அத்திவாரம் உறுதியாக அமைத்து விட வேண்டும். அது பிழைத்து விடின் முற்றும் பிழைத்து விடும்.

இங்கு அம்ஹர் மவ்லவியும் செய்தது அதைத்தான். தர்க்க ரீதியாக தமது விடைகளை நிறுவினார். "அது ஏன் அப்படி, இப்படி ஏன் செய்ய முடியாது?" போன்ற எதிர் கேள்விகள் கேட்க முடியாத வண்ணம் தமது வாதத் திறமையால் விடைகளை முன்னிறுத்தியுள்ளார்.

எந்தவொறு இடத்திலும் தடுமாறவோ, விடை தெரியாது முழிக்கவோ, சமூகத்தைக் காட்டிக் கொடுக்கவோ இல்லை. அவமானப் பட்டு நிற்கவில்லை. கேட்கின்ற கேள்விகளுக்கு மறுகேள்வி கேட்கா வண்ணம், அல்லது தர்க்க ரீதியாக விடைகளை அணுகி உள்ளார். அவரின் விடைகளானவை ஒரு சாமான்ய பௌத்த அல்லது பிற மதத்தவரிடம் இருந்த இஸ்லாம் பற்றிய (தப்பபிப்பிராயக்) கேள்விகளுக்கான தெளிவூட்டல் விடைகளே. எனவே இந்த விடயத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

பிற மதங்களிலிருந்து உதாரணங்களையெல்லாம் சில இடங்களில் எடுத்தார். இவை கத்தியின் மேலே நடப்பது போலாகும். சற்றே விலகினாலும் அது இனவாதமாகி விடும். (உதாரணமாக மேரி/ மர்யம் (அலை) பற்றிக் கூறியது. இன்னும் பல). ஆனால் அவற்றை சிறப்பாகக் கையாண்டிருந்தார்.

இதே இடத்துக்கு ஒரு சாமான்ய மவ்லவி ஒருவர் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். அம்ஹர் மவ்லவி அந்த இடத்தில் மாற்று மதத்தவர்களின் சந்தேகங்களுக்கான விடைகளை மாத்திரம் சொல்லி விட்டு வரவில்லை. எமது சமூகத்தில் உள்ள, வாராவாரம் "மேலான ஷவோதரர்களே, பெரியார்களே" என அரைத்த மாவை அரைக்கும் ஏனைய உலமாக்களுக்கும் "உங்களுக்கான பாரிய சமூகப் பொறுப்பொன்று இருக்கிறது. அதற்கான தயார்படுத்தலை நீங்கள் எமது சமூகத்துக்காக மேற்கொண்டுதான் ஆகவேண்டும்" என்பதனை கூறி விட்டுச் சென்றுள்ளார்.

வெறுமனே "மார்க்கப் படிப்பு, நான்கு சுவர்களால் எழுப்பப்பட்ட கட்டடம், அதை விடுத்துத் தாப்பை, அதற்குள்தான் உலகம், உஸ்தாத் சொல்லுவதுதான் வேத வாக்கு, அதைத் தவிற வேறு ஏதும் படிக்க வேண்டிய அவசியமில்லை" போன்ற அடிப்படைவாத கொள்கைகளைத் தாண்டி, இந்த உலகில் வரும் சிக்கல்களை ஒரு மார்க்கப் போதகராக எவ்வாறு எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமென்பதனை தெளிவாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

சிலவேளை எதிர்காலங்களில் அவரை அடிக்கடி டீவிகளில் பார்க்க முடியும். அவற்றை அவர் ஒழுங்காகப் பயன்படுத்தவாராயின், முஸ்லீங்களுக்கான ஒரு பெறுமதி மிக்க சொத்தாக அவர் மாறுவார்.

எதையும் விமர்சன ரீதியாக எழுதி விடலாம். ஒரு விடயத்தில் குறை காண்பதென்பது ரொம்ப இலகுவான விடயம். ஆனால் தெரன போன்ற பேரினவாத சேனல்களில் தட்டுத்தடுமாறாமல் விடையளித்ததே பாராட்டத்தக்க பெரிய விடயம்.

உரிய நேரத்தில் திறமையானவர்களை ஏற்றுக் கொண்டாடாது விடுவதும் சமூகத்தின் சாபக்கேடே.

விமர்சிக்கிறவர்கள் விமர்சிக்கட்டும். சில்லறைகள் என்றால் சத்தம் எழுப்பத்தான் செய்யும். நாம் அம்ஹர் மவ்லவியைக் கொண்டாடுவோம்.

- Shafnas Sabith -

10 comments:

  1. I have been watching so many programs in ITN about so many issues such as discussion in doramadalawa.
    Please tell this moulavi to go to that programtoo..
    Please speak to the director of that programm.

    Niyas moulavi and his deputy did it ..
    But Amhar moulavi is more fitting.

    I do not agree with what he said in some issues ..
    But his talk 90% are good .
    10%...disputable ones

    ReplyDelete
  2. We need to have many like him with the grace of Allah. that will strengthen the voice. hope the society will identify more such people who could bring about a change in thinking within and outside of Muslim community in living in a country like ours. I really like the words he said ISLAM IS MORE IN INDIVIDUAL DISCIPLINE WHICH BUILDS A COLLECTIVE RESPONSIBILITY...
    in sha Allah.

    ReplyDelete
  3. You can say this about Amhar Moulavi but do not criticise other respected Ulamas. Your comments show the lack of depth and maturity in you which you have to correct

    ReplyDelete
  4. Great thinking. We appreciate his courage.
    Besides our Madrasa students prepare themselves to take up the challenges in their Dahwa mission with updates knowledge
    Psy.Counsellor Misfar

    ReplyDelete
  5. மிகவும் சிந்தனைக்குரிய ஒரு கட்டுரை நன்றிகள் பல. Amhar மவ்லவிகள் போன்ற மேலும் பல Amhar களை உருவாக்குவதே இந்த மதிப்புக்குரிய Amhar மவ்லவியின் பொறுப்பாகும். சமூகமும் அதையே வேண்டி நிக்கிறது . நன்றி

    ReplyDelete
  6. first i thought "oh why this moulavi wants to talk to derana, the racist channel ?" then i watched his arguments and MASHA ALLAH, he won the day.

    ReplyDelete
  7. Masha Allah Really he is Asset for our community May Allah Bless him

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்.வ.வ.எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எங்கள் கண்ணியத்துக்குரிய அஷ்ஷேஹ் அம்ஹர் மௌலவி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.அவர்களின் இல்மிலே அல்லாஹ் மென்மேலும் பறக்கத் செய்வானாக.இந்த சமூகத்திற்காக உங்களைப் போன்றவர்களை மென்மேலும் உருவாக்கித் தருவானாக.சகோதரர் சாபித் அவர்களுக்கு உங்கள் உள்ளத்தை அல்லாஹ் சுத்தமாக்கி வைப்பானாக.உங்களிடம் உள்ள இனத்துவேசத்தை அல்லாஹ் இல்லாமல் ஆக்குவானாக.மற்றவர்களை குறை கூறுவதை விட்டும் உம்மை பாதுகாப்பானாக.கையில் விரல் இருக்கும் அதை முறையோடு பயன் படுத்த பழகுங்கள்.உள்ளத்தை சுத்தமாக்கி கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. நானும் நீங்களும் செய்யாத ஒரு கடமையை மிகவும் கச்சிதமாகச் செய்து முடித்துள்ள அம்ஹர் மௌலவிக்காகப் பிரார்த்திப்போம். தடவிப் பேசிய அதே கையோடு முகத்தில் குத்துவதற்கும் தயார் நிலையில் இருக்கும் மேதாவிகளை நினைக்கவே பயமாக இருக்கின்றது. ஏதோ காரணத்துக்காக ஏதேனும் வேறுபட்ட கருத்தினைக் கூறிவிட்டால் அதற்கான இடம் பொருள் ஏவல் எதனையும் நோக்காது , பொறுமையோடு அவதானிக்காது தாக்குதல் தொடுக்கும் ஆட்களை நினைக்கையில் அச்சம் மேலிடுகின்றது. எல்லோரும் எல்லா விடயத்திலும் மேதாவிகளாகி விடுகின்றார்கள். அம்ஹர் மௌலவி அவர்களுக்கு மாக்ஸ் போடும் தோரணையில் கருத்துக்கூறுவதும் நாகரிகமான கருத்தாடல்கள் இருக்கும்போது குத்தலான பாணியில் ஏனைய உலமாக்களை வலிந்து இழுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். இப்படித்தான் உயர்ந்த உணர்வோடு பணிசெய்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் சிறிது காலம் வேதனைப்பட்டு ஒதுங்கி நின்றார். நல்ல விடயங்களைக் காணும்போது சற்று கீழ்மட்டத்திலிருந்து அவதானிக்கும் தன்மை மேலோங்க வேண்டும். எல்லோரும் எல்லா விடயத்திலும் விற்பன்னர்கள் அல்ல.

    ReplyDelete
  10. Salam Atiq Abu
    In ur comment mentioned abt 10% disputable comments. If so why don not to clarify to understand rest of us.pls provide those.thanks.

    ReplyDelete

Powered by Blogger.