Header Ads



சாதனை படைத்தார் றிசாத், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அறிவிப்பு

அமைச்சரவைக்குள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவராக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருக்கின்றார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றில் வரவு செலவுத் திட்டத்துடன் தொடர்புடையதாக தவறான முன்மாதிரியான செயற்பாடொன்று இடம்பெற்றுள்ளது.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் நடக்காது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு அவர் வகித்த அமைச்சு பதவிக்கு மேலதிகமாக தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவறான முன்மாதிரியே.

இதேவேளை தற்போதைய அமைச்சரவையில் மிகவும் அதிர்ஷ்டமான அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் ரிசாட் பதியுதீனே.

அரசாங்கத்தின் 5 பிரதான அமைச்சு பதவிகளை அவரே வகிக்கின்றார். அமைச்சு பதவிகளை வகிக்கும்போது நீண்ட வரிகளைக்கொண்ட அமைச்சராக அவர் இருக்கின்றார்.

இது அவர் மீதான நம்பிக்கையையே காட்டுகின்றது, அரச தலைவரும் அரசாங்க தலைவரும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும் 2015ஆம் அண்டுக்குப் பின்னர் தொழிற் பயற்சி அமைச்சராக 6 பேர் பதவியேற்றுள்ளனர். அது தொடர்பான நிறுவனங்களில் அபிவிருத்திகளை காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.