Header Ads



நியூசிலாந்து தாக்குதலுக்கு, ஊடகங்கள் என்னை குற்றம்சாட்டுகின்றன - புலம்பும் டிரம்ப்

நியூசிலாந்து தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்தி குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் அதிகநேரம் வேலை செய்வதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஊடகங்கள் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்தி குற்றம்சாட்ட பார்ப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘நியூசிலாந்து தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்டுவதற்காக அமெரிக்க ஊடகங்கள் இரவு, பகலாக Overtime வேலை பார்க்கின்றன.

இதில் என்னை ஈடுபடுத்த ஊடகங்கள் பெரும்பாடு படுகின்றன. இதுபோன்ற போலிச் செய்திகள் கேலிக்குரியதாகும்’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவைச் சேர்ந்த சில ஊடகங்கள் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை வெள்ளை இனவெறியர் என்றும், பயங்கரவாதத்தின் வாக்குறுதியாக செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வெள்ளை மாளிகை தலைவர் மைக் முல்வானே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை இனவெறியர் இல்லை. இதை பலமுறை கூறிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (அல் குர்ஆன்: சூராஹ் - இம்ரான் (3), வசனம் 120)

    ​11 Sep ​2001 அன்று ஒரு கல்லில் பல மாங்காய்களை கைக்கொள்ளும் சூழ்ச்சியை அரங்கேற்றினீர்கள், பழைய ஆயுதங்களை முஸ்லிம் நாடுகளில் கொண்டு சென்று அழித்து முடித்தீர்கள், புதிய ஆயுதங்களை பரீச்சித்து விளம்பரப்படுத்தி ஒவ்வொரு உலக நாடுகளிடமும் தமது ஆயுத விற்பனையை அதிகப்படுத்திக் கொண்டீர்கள், முஸ்லிம் நாடுகளின் வளங்களை சுருட்டிக் கொண்டீர்கள், அவர்களை தீவிரவாத பயத்தை உண்டு பண்ணி பாதுகாப்பு, வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொண்டீர்கள், உலக அரசியலில் தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டீர்கள், இறுதியில் ஊடகங்களை வைத்தும் ஜால்றா அரசுகளை வைத்தும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டி, இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என காட்ட சூழ்ச்சி செய்தீர்கள்.

    கிட்டத்தட்ட கடந்த இருபது வருடங்களாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி இன்பம் அனுபவித்தவர்கள் மீதே அந்த அம்பு இன்று திரும்பியிருக்கிறது.

    அனைத்து சூழ்ச்சிகளும் அவிழும் காலம் வெகு தொலைவில் இல்லை. இறைவனின் சூழ்ச்சி விரைவில் உங்களை சூழ்ந்து கொள்ளும். இஸ்லாம் ஒவ்வொரு வீட்டினுள்ளும் நுழையும்.

    ReplyDelete

Powered by Blogger.