Header Ads



மோடியும், பாஜக வும் ஏன் தோற்கவேண்டும் - ஒவ்வொரு இந்துவும் வாசிக்க வேண்டியது

*இந்த தேர்தல் ஒரு சிக்கலான தேர்தல்!*
இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். மற்ற தேர்தல்களை போல் இல்லாமல் இந்த தேர்தலில் இரண்டு லேயர் இருக்கிறது. 
இதை நாம் சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே இதில் நாம் வெல்ல முடியும்.
*முதல் லேயர்:*
2014ல் முதல் முறையாக இந்துத்துவ நாஜிகள் பெருபான்மை பெற்று ஆட்சி அமைத்தனர். 
இந்த ஐந்து ஆண்டுகளில் நாஜிகளால் என்ன செய்ய முடியுமோ, முடிந்தவரை செய்தும்விட்டனர்.
இப்போது மீண்டும் ஆட்சி அமைத்து இந்தியாவை நாஜி ஜெர்மனி போல் உருவாக்க துடித்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு பல்வேறு தில்லு முல்லுகள் செய்ய முயர்ச்சி செய்வார்கள்.
*இரண்டாம் லேயர்:*
இதுதான் மிகவும் ஆபத்தான லேயர். 
2014ல் முதல் முறையாக இந்துத்துவ நாஜிகள் பெருபான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும் அதற்கு முழுக்க முழுக்க காரணம் மோடிதான். நாஜிகளுக்கு ஒரு விற்கும் முகம் தேவைபட்டது அது மோடியாக அன்றைக்கு உருவெடுத்தது.
ஆனால் மோடி முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவ நாஜியா? என்றால் அப்படி சொல்ல முடியாது. 
மோடி ஒரு பாசிஸ்ட் தான் அதிகாரத்துக்கு வர நாஜிகளை பயன்படுத்திக் கொண்ட பாசிஸ்ட் அவவளவுதான்.
RSSதான் மோடியை ஆட்டுவிக்கிறதா என்றால் இல்லை. அந்த கட்டத்தை பாசிஸ்ட் மோடி எப்போதோ கடந்து விட்டார். இன்னும் சொல்லப்போனால் RSSக்கும் மோடிக்கும் ஒரு பெரிய போரே நடந்து கொண்டு இருக்கிறது.
மோடிக்கு FACE VALUE இருக்கு. 
தொண்டர் பலம் இல்லை.
RSSக்கு தொண்டர் பலம் இருக்கு. 
FACE VALUE இல்லை.
இவர்களில் யாராவது ஒருவர் கையை விட்டால் கூட இருவரும் மண்ணை கவ்வுவார்கள். 
இதனை நன்கு உணர்ந்தே பொது வெளியில் இவர்கள் சண்டையிடாமல் அமைதிகாக்கின்றனர்.
இவர்கள் பிரச்சனையில் நமக்கு என்ன பேராபத்து என்றால்?
இந்த ஐந்து வருடத்தில் தனக்கு இருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் வைத்து மோடி மிக அதிகமாக ஆட்டம் போட்டுவிட்டார். மோடி தான் பாஜக, பாஜக தான் மோடி என்ற நிலைக்கு வந்து விட்டது. இதை RSS சிறிதும் விரும்பவில்லை அதை எதிர்பார்க்கவில்லை.
மோடி ஆட்சி முதல் ஆண்டு முடிவில் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருந்த போதிலும் அங்கு யாரும் செல்லாமல், RSS தலைமையில் நடந்த 'பாஜகவின் ஒரு வருட ஆட்சி" ரிப்போர்ட் கார்டை குடுக்க சென்றனர்.
ஆனால் அதற்கு பிறகு ரிப்போர்ட் கார்டு நடைமுறை நடக்கவே இல்லை. ஏனெனில் மோடி அதிகாரம் முழுமையாக விரிவடைந்தது. தன்னையும் 
அமித்ஷாவையும் தாண்டி யாருமில்லை என்று பாஜகாவிற்குள்ளையே ஒரு நிலையை ஏற்படுத்திய பின்னர் பல தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
மோடியின் மற்றும் அமித்ஷா மீது கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்தாலும் கூட மோடியை வைத்துதான் அதிகாரம் என்பதால் RSS/பாஜக தலைவர்கள் அமைதிகாக்கின்றனர்.
இது மோடிக்கும் நன்றாக தெரியும். ஆனால் மோடிக்கு என்றைக்கு அதிகாரம் கைவிட்டு போகிறதோ அன்று அவரை RSS தூக்கி எறிந்துவிடும். பாஜகவிலேயே பலர் பழிவாங்க காத்து இருக்கின்றனர். 200 சீட்டுக்கு குறைவாக பாஜகவிற்கு கிடைத்தால் RSS கண்டிப்பாக மோடியை முன்மொழியாது. மேலும் மோடிக்கு தனக்கு முன் இருந்த அத்வானி வாஜ்பாய் போன்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் தெரியும்.
2004ல் வாஜ்பாய் தோற்ற பின் அவர் காணாமல் போனார். 
2009ல் அத்வானி தோற்ற பின் அவர் காணாமல் போனார்.
ஆனால் இவர்கள் யாரும் தங்கள் கட்சிக்குள்ளையே விரோதத்தை வளர்த்தறுக்கவில்லை அதற்கு மோடி அளவிற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடைக்காதது கூட காரணமாக இருக்கலாம்.
இந்த தேர்தலில் மோடி தோற்றால் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் மரியாதையாக நடத்துவது போல் பாஜக/RSS கண்டிப்பாக நடத்தாது. சுவடே இல்லாமல் செய்துவிடும்.
இதை நன்கு உணர்ந்து இருக்கிறார் மோடி. 
அதனால்தான் நமக்கு இது பேராபத்து.
தான் தோற்றுவிட்டால் தன் சொந்த கட்சியினரே பழிவாங்குவார்கள் என்று மோடிக்கு தெரியும் அதனால் இந்த தேர்தலில் ஜெயிக்க எதையும் செய்வார். அதனால்தான் பாகிஸ்தானுடன் போருக்கு செல்ல கூட அவர் தயங்கவில்லை.
நம் பார்வையில் இந்த தேர்தலில் இந்தியாவில் எதிர்காலம் காப்பாற்றபடவேண்டும்.
ஆனால் மோடியின் பார்வையில் அவரின் எதிர்காலம் காப்பாற்றபடவேண்டும்.
அதற்காக எதையும் செய்வார் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் .
ஒரு விஷமமான கொள்கை கொண்டவனிடம் கூட ஒரு நிதானம் இருக்கும். ஆனால் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முற்படுபவன் மிக மிக ஆபத்தானவன்.
ஏனெனில் அவன் பார்வை ஒரு சுத்தியலை போலானது ! 
தன்னை தவிர அனைத்துமே சுத்தியலுக்கு ஆணியாகவே தெரியும். எச்சரிக்கையாக இருப்போம் !
*- நாட்டின் நலன் கருதி, த

ஷியாம்
(முன்னாள் ஆசிரியர் தராசு வார இதழ்)

2 comments:

  1. இந்தியா இந்தி நாடு அவ்வளவுதான் பாக்கிஸ்தான் இஸ்லாம் நாடு 85 வீதம் இந்துக்கள் உள்ள ஒரே நாடு இந்தியா இந்துக்களின் தலைவா் மோடி அவா்களே ஓம் சிவாய நம

    ReplyDelete
  2. India is very good country?
    Because Hindu religion is Very bad!!!

    ReplyDelete

Powered by Blogger.