Header Ads



மைத்திரிக்கு வக்காலத்து வாங்காதீர்கள் என, சஜித் மீது பாய்ந்த பின்வரிசை எம்.பி.க்கள்

ஜனாதிபதியின் கீழ் வரும் மூன்று பிரிவுகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமல்லவா...

ஜனாதிபதி அலுவலகம் - பாதுகாப்பமைச்சு- சுற்றாடல் அமைச்சு ஆகியனவே அவை...

பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் ஓகே.. ஆனால் அடுத்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் வேலை செய்து வரும் ஜனாதிபதி அலுவலகத்திற்கும் அதன் பிரசார செலவுகளுக்கும் உதவுவதா..? எதிர்த்து வாக்களிப்போம்..
இப்படி முரண்டு பிடித்து வருகின்றனர் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம் பிக்கள்...

இவர்களை சமாதானப்படுத்தி - அப்படியெல்லாம் செய்யக் கூடாதென கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சொல்ல..

“உங்களை நாங்கள் மதிக்கிறோம்.. ஆனால் இன்னொரு கட்சித் தலைவருக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.. ப்ளீஸ் ..”

என்று சஜித்துக்கு அந்த எம் பிக்கள் டோஸ் கொடுத்ததாக தகவல்..!

-Siva-

No comments

Powered by Blogger.