Header Ads



'தனி ஓநாயாக' சித்தரிக்கப்படும் பயங்கரவாதி குறித்து, நியுஸிலாந்து கூறுவதை நம்பலாமா...?

Brenton Tarrant ஒரு திசைதிருப்பப்பட்ட "தனி ஓநாயாக" சித்தரிக்கப்படுகிறான். 

அவுஸ்திரேலியாவில் பிறந்த ஒருவன். அவனை தங்களால் கண்காணிக்க முடியாது என நியுஸிலாந்தின் உளவுத்துறையும், பொலிஸாரும் சொல்வது நம்கமான கருத்துகள் அல்ல.

டாரன்ட் வெளியிட்டுள்ள 74 பக்க தனது மிஷன் அன்ட் விஷன் நோக்க அறிக்கையானது, அவன் பல ஆண்டுகளாக வெளிப்படையாக கூடி இயங்கிய பாசிசவாதிகள் மற்றும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் ஒரு சர்வதேச வலையமைப்பின் சார்பிலேயே பயங்கரவாத அட்டூழியத்தை மேற்கொண்டுள்ளான் என்பது தெளிவாகிறது.

Brenton Tarrant வாக்குமூலமளித்த அவனது அறிக்கையானது ஹிட்லிரின் “எனது போராட்டம் ” என்ற கருத்தின் புரிய வடிவமாகும்.

துப்பாக்கிதாரி, "பல தேசியவாத குழுக்களுக்கும் நன்கொடை அளித்துள்ளான்... மேலும் பலவற்றுடன் தொடர்பு வைத்துள்ளான்" என்று எழுதியுள்ளான்.. 2012 இல் இருந்து, அவன் பல்கேரியா, ஹங்கேரி, சேர்பியா, குரோஷியா, பொஸ்னியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், துருக்கி, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியாவிற்கு கூட பயணம் செய்துள்ளான், அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்து மீண்டும் நியூசிலாந்துக்கு பயணம் செய்துள்ளான்.

இவை சாதாரண இயல்பான பயணங்கள் அல்ல. பிரெஞ்சு தேர்தலில் தீவிர வலதுசாரி தேசிய முன்னணியின் தோல்வியைத் தொடர்ந்து, 2017 ல் ஐரோப்பாவிற்கு இரண்டு மாத சுற்றுப்பயணத்தின் போதே பயங்கரவாதத்தை நோக்கி திரும்ப தீர்மானித்ததாக அவன் கூறுகிறான்.
டாரன்ட், நோர்வே பாரிய பாசிச கொலைகாரன் “ஆன்டர்ஸ் பிரைவிக்குடன்” தொடர்புபடுத்தப்பட்ட நைட்ஸ் டெம்ப்ளர் (Knights Templar) என்றழைக்கப்படும் ஒரு அமைப்புடன் தொடர்பு கொண்டதுடன் மேலும் கிறிஸ்ட்சேர்ச்சின் தாக்குதலுக்கு அதனிடமிருந்து "வாழ்த்து" கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளான்.

கத்தோலிக்க சாம்ராஜ்யத்தை நிறுவத்துடிக்கும் இந்த அமைப்பு வரலாற்றில் சிலுவை யுத்தங்களிற்கு பின்னால் இயங்கியது. ஆனால் மேற்கின் ஊடகங்களை இதனை ஒரு போதும் பயங்கரவாத அடிப்டைவாத அமைப்பாக உலகிற்கு வெளிப்படுத்துவதில்லை.

Knights Templar பற்றிய இன்னொரு பதிவு தேவை என்பது இங்கே என்னால் உணரப்படுகிறது. 
அவர்கள் இந்த தாக்குதலை வாழ்த்தியுள்ளார்கள். தாக்குதலிற்கு முன்னர் கொலைகாரனிற்கு பிளஸ்ஸிங் செய்துள்ளார்கள்.

வலைத்தளங்களில் அவன் முஸ்லிம்களின் புலம்பெயர்வு பற்றி தனது கசப்பான எண்ணங்களை அடிக்கடி வெளிப்படுத்தி வந்வவன் இவன். இதற்கான தீர்வாக இவர்களை அழிக்க வேண்டும் என முழங்கியவன். ஆனால் யாரும் இதனை சட்டைசெய்யவில்லை.

நியுஸிலாந்தை வந்தடைந்து சிறிது காலத்திற்கு பின் ஒரு துப்பாக்கி சுடும் கழகத்தில் சேர்ந்தான். "வெள்ளையர் அல்லாதோருக்கு" "உலகில் எங்கும் பாதுகாப்பு இல்லை" என்பதை நிரூபிப்பதற்கே நியூசிலாந்தை தனது தாக்குதலை நடத்தும் நாடாக தேர்ந்தெடுத்ததாக அவன் அறிவித்தான்.

இவை அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களின் "கண்காணிப்புக்கு உட்படாதவை" என்றால், டாரன்ட்டின் அறிக்கை அது எவ்வாறு என்பதற்கு ஒரு விளக்கத்தை அளிக்கிறது. அரச எந்திரம், இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றுடன் ஆழமாக பிணைந்துள்ள பாசிச குழுக்களை அவன் பெருமைப்படுத்தினான்.

ப்ரெண்டன் டாரன்ட் இன் அதே மாதிரியான கருத்துக்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளையும் தனிநபர்களையும் அமெரிக்க கொங்கிரஸ் மற்றும் வெள்ளை மாளிகையிலிருந்து ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் பாராளுமன்றங்களிலும், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரை காண முடியும்.

ஒரு இரகசிய வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல், நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் ஜேர்மனிய ஆயுதப்படைக்குள் இருப்பது வெளிப்பட்டுள்ளது. வலையமைப்பின் உறுப்பினர்கள் நீதி அமைப்பு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தில் முக்கிய நபர்களைக் கொலை செய்வதற்கும் முஸ்லீம் அமைப்புக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்தவும் விரிவான திட்டங்களைக் கொண்டிருக்கிறது.

ஒரு பாசிச அரசியல் அடித்தளத்தை வளர்ப்பதற்கு முயலும் ஜனாதிபதி ட்ரம்ப்பை, "புதுப்பிக்கப்பட்ட வெள்ளை அடையாளத்தின் ஒரு சின்னம்" என டாரான்ட் விபரிக்கிறான்
ட்ரம்ப், கிறிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தனது பாசிச ஆதரவாளர்களுக்கு ஒரு ஆதரவளிக்கும் செய்தியாக, "வெள்ளை தேசியவாதத்தை" ஒரு அச்சுறுத்தலாக அவர் கருதவில்லை என்று கூறினார்.

நியூசிலாந்து படுகொலைகள் ஒரு சில தனிநபர்களின் இன, நிற வெறியின் வெளிப்பாடுகள் என இயல்பாக காட்ட முனைகின்றன ஊடகங்கள்.

வேகமாக கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் நுழைவதற்கு எதிரான பாசிஸ நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஆயுத வன்முறையே இது. உலகம் முழுக்க அதனை இவர்கள் நிகழ்த்த முயல்வார்கள் என்பதே உண்மை.

இது ஒரு வரலாற்று போரியலின் இன்னொரு முனைவு. இன்னும் நிறைய காத்திருக்கின்றன.

Roomy Abdul Azeez

3 comments:

  1. சிறந்த தேடல். 👏👏👏👏

    ReplyDelete
  2. YES.. Other foxes guided him and waiting behind

    ReplyDelete
  3. நீயூசிலாந்து அறிவித்த தகவல் தான் உண்மையானது.

    இந்த கொலைகாரன் எந்தவொரு அமைப்பகளுடனும் தொடர்புபட்டவனில்லை.
    தனிப்பட்ட விரோதம் அல்லது மனநிலை பாதிப்பு மட்டுமே காரணம்.

    UN யின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் எந்தவொரு கிறிஸ்தவ அமைப்புகளின் பேயர்களும் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.