Header Ads



தமிழர்ளின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில், முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பேச வேண்டும் - விக்னேஸ்வரன்

தமிழ் பேசும் மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில்  முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் அரசதரப்புடனும் பேசி உரிய தீர்வை பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஊடகங்களுக்கு மேலும் அவர் தெரிவிக்கையில்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேர்தல் காலங்களின்போது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் பிரச்சாரங்களின்போதும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தான்தேன்றிதனமாக செயற்பட்டு தாங்கள் விரும்பியவற்றை மாத்திரம் அடைந்து கொள்ள முன்வந்ததால் தான் நாங்கள் புதிய அரசியல் கட்சி ஓன்று ஆரம்பிக்க வேண்டிய நிலை வந்தது.

மத்திய அரசாங்கத்தினதும் வெளிநாடுகளினதும் உதவியை நம்பாமல் எமது முயற்சியால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதுவரையில் எமது பிரச்சினைகளுக்கான  அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்குரிய தீர்வும் கிட்டவில்லை

நாங்கள் விரும்பியதை விடுத்து அவர்கள் விரும்பியதை எமக்கு தர முயற்சிக்கின்றனர். அப்படி அவர்களது விருப்பத்தை எம்மீது திணிக்க முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சுயநலன் சார்ந்து செயற்பட்டதால்தான் கிழக்கில் இப்பொழுது காணி அபகரிப்புகள் சட்ட ரீதியற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனை அனுபவம் வாய்ந்தவர்களின் அனுசரணையுடன் உரிய புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தீர்க்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் முதன்மையாக இப்பிரச்சினைகள் சம்பந்தமாக தமிழ் பேசும் மக்களின் எல்லாத் தரப்பினருடனும் எல்லோரும் சேர்ந்திருந்து பேச வேண்டும்.

பின்னர் அரசதரப்புடனும் பேசி உரிய தீர்வை பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதற்கான முன்னெடுப்புக்கள் இப்பொழுது துவங்கி விட்டன” என்றார்.

4 comments:

  1. No need do your work Mr Vikneswaran

    ReplyDelete
  2. It is a good move Hon Justice Vigneshwaran.It is a known fact that politicians are doing trading - they spent money for their elections as invrstment and earning by many folds after the election. Finally we are the losers.

    ReplyDelete
  3. நீ முதல்ல வட மாகான முஸ்லிம்களின் காணியை விடுவிக்க முயற்சிசெய். யாழ்மையவாத கருத்தினால் இந்த நாடு சந்தித்த அழிவு போதும்

    ReplyDelete
  4. பயங்கரவாதிகளோடு பேச நாம் தயாரில்லை.

    ReplyDelete

Powered by Blogger.