Header Ads



“நியூசிலாந்து முஸ்லிம்கள், எங்கள் சகோதரர்கள்” - நல்லிணக்க நறுமணத்தை வீசிய பிரதமர் ஜெஸிந்தா


நியூசிலாந்து பள்ளிவாசல்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த உடனே நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டேன் எடுத்துவரும் போர்க்கால நடவடிக்கைகள் பெரும் பாராட்டுகளைத் தேடித் தந்துள்ளன.

“நியூசிலாந்து முஸ்லிம்கள் எங்கள் சகோதரர்கள்...” “பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் இருக்கிறோம்” எனும் ஆதரவுக் குரல் நாடு முழுவதும் கேட்கிறது.

“அன்பு எப்போதும் துவேஷத்தைத் தோல்வியுறச் செய்யும். முஸ்லிம் சகோதரர்களுக்கு எங்களின் நிறைந்த அன்புகள்” என்று பூக்களால் எழுதி வைத்த வாசகங்கள் நல்லிணக்க நறுமணத்தை வீசிக் கொண்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய நியூசிலாந்து பிரதமர், முஸ்லிம் சமுதாயப் பிரதிநிதிகளை அழைத்தும் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் சரி,

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்ன போதும் சரி,

இஸ்லாத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் முஸ்லிம் உணர்வுகளைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாகவும் பிரதமர் ஜெஸிந்தா தலைத்துணி (ஸ்கார்ப்) அணிந்திருந்தார்.

வலதுசாரி தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

(படம்- பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த ஒருவரின் உறவினருக்கு ஆறுதல் கூறும் பிரதமர் ஜெஸிந்தா)

-சிராஜுல்ஹஸன்

4 comments:

  1. இப்படியான கிருஸ்தவ நாட்டு தலைவர்களை பார்த்ததாஙது, பாக்கிஸ்தான் போன்ற முஸ்லிம் நாட்டுகளின் தலைவர்களும் திருத்த வேண்டும். பயங்கரவாதகளை ஒழிக்க வேண்டும்

    ReplyDelete
  2. You cannot straighten the dog's tail buddy. Don't have too much of hope. It's very unfortunate that Muslim community(at least most of them) are enmeshed in the sense Muslims in general only help each other

    ReplyDelete
  3. அண்ணன் அஜன், உங்க கவலை புரியுது அண்ணா, முஸ்லிம்கள் அழிவது ஒரு பக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக பொய்யாக சித்தரித்து கட்டிய கற்பனைக் கோட்டை படிப்படியாக சிதைந்தும் வருகிறது. ஒரு நாள் அது தகரும் இன்ஷா அல்லாஹ். பொய் பூமியில் அதிக நாள் வாழாது அண்ணா.

    நல்ல கிறிஸ்தவ தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இறைத்தூதர் காலத்திலும் நஜ்ஜாஷி எனும் கிறிஸ்தவ மன்னரை நம்பி முஸ்லிம்களை அவரது தேசமான அபீசீனியாவிற்கு பாதுகாப்பாக வாழ அனுப்பி வைத்தார்கள். இன்றும் அவர் போன்ற கிறிஸ்தவ தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் மதிக்கிறோம், அது எங்கள் தூதர் காட்டித்தந்த வழிமுறை.

    ReplyDelete
  4. Never mind anjan anthayraj
    He has mentally health problem
    Pls any one could help him his recovery.god bless him

    ReplyDelete

Powered by Blogger.