Header Ads



சம்பந்தன் ஐயாக்கு, ஒரு திறந்த மடல்!

பழம் பெரும் அரசியல் விடுதலை இயக்கமான தமிழர் விடுதலைக்கூட்டணியின் பெரும் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்களின் வழியில் புறப்பட்டு அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களின் அனுபவம் கண்டு மூன்றாவது அதன் பெரும்தலைவராக அரசியல் முதிர்ச்சி கொண்ட உங்களை இந்த வேளையில் ஒரு கடிதம் வாயிலாக தொடர்பு கொள்வதை கண்டு ஆணந்தமடைகின்றேன் !

ஐயா 
பெரும்பான்மை இனவாதம் சிறுபான்மை  இனங்களை வேட்டையாட புறப்பட்ட காலம் தொட்டு தமிழர் போராட்டம் முனைப்பு பெற்ற காலத்தில் பிறந்த நானும் சகோதர சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவன் என்ற வகையிலும் இரண்டாவது இனமான தமிழ் இனத்தின் விடுதலை போராட்டத்தை முன்னெடுத்த ஆயுத இயக்கங்களினதும் பேரினவாத சிங்கள ஆட்சிகளதும் அநியாயம்களாலும் அவர்களின் ஆயுத போராட்ட இயக்கங்கங்களுக்கும்  இடையே அகப்பட்டு அநியாயமாக அழிவடைந்து அரசியல் அநாதையாகி கொண்டிருக்கும் ,முஸ்லிம் சமூகத்தின் விடுதலை குரலாக இயங்கிய அதன் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களை இழந்து தவிக்கும் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் என்ற வகையிலும் இன்றைய வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் சூழலில் இந்த உங்களது தமிழர் விடுதலை கூட்டணியினதும் அதன் தலைவரான பழுத்த அரசியல் ஞானம் கொன்ட உங்களதும் உங்களது கட்சியின் சில நடவடிக்கைகள் குறித்தும் எனது சமூகம் சார்பாக விடயங்களை பகிர்வதற்கு விளைகின்றேன் ,

ஐயா

அன்று எங்களது சமூக மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் 1976 ம் ஆண்டு திருமலை எழுச்சி தமிழர் மகாநாட்டில்முழங்கினார் “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழர்களுக்கு ஈழத்தை பெற்று தராவிட்டால் இந்த அஸ்ரப் பெற்று தருவான் என்று “ என்பதை அந்த இயக்கத்தில் அன்று இளவயதில் இருந்த நீங்கள் இன்றும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை , அவ்வாறே பல முஸ்லிம் தலைவர்களும் மக்களும் அன்றைய காலப் பொழுதுகளில் உங்களது பாசறையில் இணைந்து செயற்பட்டு வந்தனர் , அன்றைய தமிழர் தலைவர்களும் முஸ்லிம்களை இணைத்து தங்களின் அரசியல் ஆயுத போராட்டத்தையும் கொண்டு சென்றனர் என்பது வரலாறு ,

ஐயா ,பின்னர் ஆயுத போராட்டம் முனைப்பு பெறுகையில் எமக்குள் பூந்து விளையாடிய பெரும்பான்மையினமும் ஆட்சியாளர்களும் எங்களுக்குள் பாகுபாடுகளையும் முரன்பாடுகளையும் எவ்வாறு ஏற்படுத்தினர் என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை , 

பல்லிணங்கள் வாழும் ஓர் நாட்டில் மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளை என்பதை அரசியல் விற்பன்னரான நீங்கள் அறியாதவர் அல்ல , அவ்வாறான நிகழ்வுகளும் கடந்த காலத்தில் தமிழர் ஆயுத போராட்டம் மூன்றாவது தேசிய இனமான முஸ்லிம்களை வலிந்து இருந்தபோது பிரிவினைகளை மேற்கொண்ட போத , அவ்வாறு அவர்கள் திசை மாறிய வேளைகளில் நடந்ததும் உண்டு , 

ஆனால் இப்போது நடப்பது என்ன ? உங்களது இயக்கத்தில் புடம் போடப்பட்ட சில தலைவர்கள் தங்களுக்கு கிட்டிய அரசியல் அதிகாரங்களை தற்போது  தக்க வைக்க வேண்டும் என்பதற்காக உங்களது போராட்டத்துக்கு இடையிலே கழுத்தறுப்பு செய்த உபகண்ட இந்துத்துவ ஆட்சியின் கையாட்களாக மாறி இந்த நாட்டின் முதலாம் இனம் உங்களுக்கு அன்று எதை செய்ததோ அதையே மீண்டும் மூன்றாவது இனமான முஸ்லிம்களுக்கு செய்ய முற்படுகின்றர்கள் என இந்த சமூகம் வேதனையில் இருக்கும் போது ,நாங்களும் எங்களது அரசியல் தலைமைகளும் “தமிழர் விடுதலை அரசியல் போரட்டத்துக்கு குறுக்கே நிற்கப்போதில்லை “என்ற அதே பழைய கொள்கையோடு இருக்கையில் மீண்டும் மீன்டும் மஸ்லிம்களையும் அவர்களது வாழ்விட பொருளாதார கலாச்சார விடயங்களில் முட்டுக்கட்டை போடுவதும் அதற்காக பேரினத்துடனும் இந்துத்துவ மதவாத சக்திகளுடனும் கைகோர்ப்பதும் அவற்றை கண்டும் கேட்டும் அறிந்தும் நீங்கள் மௌனம் காப்பதும் ஏன் ?

நீங்கள் ஆரம்பித்த அரசியல் ஆயுத போராட்டம் எந்தவித விடிவும் இன்றி பல்லாயிரம் உயிர்களையும் பல்லாயிரம் கோடி சொத்துக்களையும் பெறுமதி மிகு தலைவர்களையும் இன மத பேதமின்றி அழித்து நாசமாக்கி உங்களது சமூக போராட்டம் தோல்வி அடைந்து பழைய ஆரம்பித்த அதே இடத்துக்கு வந்து விட்டது என்பது உலகறிந்த விடயம் என்பது உங்களுக்கு புரியாத விடயம் அல்ல ,

இப்போது நீங்களும் உங்களது போராட்டத்தால் பாதிக்கப்பட்ட நாங்களும் ஒரே இடத்தில் நிற்கிறோம் , ஆனால் ஒரு வித்தியாசம் நீங்கள் பேரினத்தின் சலுகை பதவிகளுக்கு எங்களது சமூக அரசியல் தலைவர்கள் போல் சோரம் போகாமல் தனித்துவத்துடன் உள்ளீர்கள் , ஆனால் எங்களது தலைவர்கள் தங்களையும் தங்களது சில ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அவர்களை ஆதரித்த மக்களை விட்டு மாறி ஆளும் வர்க்கங்களை ஆதரித்து அனுபவித்து நிற்கின்றனர் , இதுதான் வித்தியாசம் ,

ஒன்று ஐயா முஸ்லிம்கள் தமிழை தாய் மொழியாக பேசிய போதும் எங்களது கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் பொருளாதார விடயங்கள் போராட்ட முறைகள்  ஆடை அலங்கார வணக்க வழிபாடுகள் உங்களை விட மாறுபாடானது , அதை தேசிய ஒரு இனம் என்ற வகையில் பாதுகாக்கும் கடமையும் எங்களுக்கு உண்டு , 

அன்மைய மூன்று தசாப்த உரிமை போரில் ஆரம்ப கட்டங்களில் நாங்கள் உங்களோடு தோள் சேர்ந்து பேரினத்திடம் இருந்து உரிமைகளை பெற்று வாழலாம் என எண்ணினோம் , ஆனால் வெண்ணை திரண்டு வந்த வேளை நீங்கள் எங்களை ஆயுத போராட்டத்தின் பேரால் வேட்டையாட ஆரம்பித்தீர்கள் , அழிவடைந்து போன புலிகளின் போராட்டம் எங்கள் இனத்தை. இரவோடு இரவாக உடுத்த ஆடையுடன் துப்பாக்கி முனையில் துரத்தியடித்தது , பள்ளிகளில் பாடசாலைகளில் படுத்துறங்கும் வேளைகளில் பாதை நடுவில் பச்சிசளம் குழந்தைகளை கூட ஈரவிரக்கம் இன்றி கொன்றொழித்தது ,

எங்களது சமூக படித்த பல் துறைகளில் இருந்தவர்களை கொண்றொழித்தது , இளைஞர்களை கடத்தி காவு கொண்டது , சமாதாண காலத்தில் சரணடைந்தத போலீசாரை தரம்பிரித்து முஸ்லிம்கள் என்பதற்காக கொண்ரறொழித்தது , இவை நடைபெற்ற போதெல்லாம் நீங்களும் இந்த அரசியலில் தான் இருந்தீர்கள் , ஏனைய தமிழ் தலைமைகளும் பார்த்தே இருந்தார்கள், இவை எல்லாம் எதற்காக ? உங்களோடு ஒன்றித்து போக நாங்கள் நினைத்ததற்காகவா? 

சரி பழையவை பழையவை , என விட்டால் இன்று நடப்பது என்ன , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி இன்னாள் வடக்கு முதல்வர் விக்னேஷ்வரன் அவர்கள் என்ன செய்து கொண்டு உள்ளார் , இடம் பெயர்க்கப்பட்டு விரட்டப்பட்ட வடபகுதி முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது அவரது காலத்தில் ? மோடி அரசின் ஏவலாளியாக அவர் இந்துத்துவ சங்கராச்சாரியத்தை பேரினத்துடன் சேர்ந்து எங்களுக்கு எதிராக அரங்கேற்றுகிறார், நீங்கள் பிறந்த மாவட்டத்தில் உள்ள சன்முகா வித்தியாலய விவகாரத்தில் நீங்களும் உங்களது கட்சியும் நடந்த விதம் என்ன ? கல்முனை தோப்பூர் பிரதேச பிரதேச சபை விடயத்தில் உங்களது இரட்டை வேடம் என்ன என்பதை கூட நாங்கள் அறிந்து கொண்ட பின்னரும் நாங்களும் எங்களது சந்தர்ப்பவாத தலைவர்களும் உங்களுக்கு பின்னால் உங்களை சகோதர வாஞ்சையோடு சேர்த்து உங்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் வாழ வேண்டும் என நீங்களோ அல்லது எங்களது உங்களுக்கு சாமரம் வீசி திரியும் எங்களது தலைவர்களோ நினைத்தால் அதை ஏற்றுக்கொள்ள எங்களது மக்கள் ஒன்றும் முட்டாள்கள் புத்தி பேதலித்தவர்கள் அல்ல , 

சில முஸ்லிம் தலைவர்கள்  ஏதோ உங்களை எங்களது உரிமைகளை காப்பவராக நினைத்து நீங்கள் பெறும் உரிமையில் இருந்து எங்களது உரிமைகளை பெறுவோம் என்ற நினைப்பில் அரசியல் செய்தால் அவர்களுக்கு உரிய பாடத்தையும் வழங்க இந்த சமூகம் எதிர்காலத்திலும் தயாராகவே உள்ளது ,

இனப்பிரச்சினை தீர்வு என்ற மேசையில் தனிநாடோ, சமஷ்டியோ , அதிகாரமோ அதிகார பரவலாக்கமோ எதுவாயினும் இந்த சிறுபான்மை இரண்டு இனங்களினதும் தீர்வுகளை தரவேண்டியது பெரும்பான்மை இனமும் இந்த நாட்டு அரசாங்கமுமேயாகும் , பேரினவாத்த்தால் அப்போது பாதிக்கப்பட்ட நீங்களும் அப்போதும் இப்போதும் பாதிக்க்ப்பட்ட நாங்களும் பின்னர் சமாதான காலத்தில் சிற்றின பேரினவாத்த்தால் பாதிக்கப்பட்ட நாங்களும் இனிமேல் தீர்வு நோக்கி ஒரே மேசையில் பேரினத்தோடு சரிசமமாக அமர்ந்து இரண்டு இனங்களும் “தனித்தனியாக பேரின அரசாங்கத்திடம் பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நீங்களும் உங்களது கட்சிகளின் தலைவர்களும் நிர்ப்பந்தப் படுத்தி விட்டீர்கள் “

எனவே சம்பந்தன் ஐயா அவர்களே ! இனிமேல் எங்களது இனம் உங்களோடு பேசும் நிலை ஏற்புடையதாக போவதில்லை , வடக்கு கிழக்கு இணைப்பு பிரிப்பு போன்ற விடயங்களை இனிமேல் வரும் எங்களது சமூகம்கள்தான் இனிமேல் நடப்பவற்றை கொண்டுதான் பரிசீலிக்க போகின்றனர் , 

நீங்கள் உங்களது வாய்களால் பேசாமல் இதயங்கலால் பேச வேண்டும் , ஆனால் நீங்கள் உள்ளத்தால் ஒன்றும் செய்கையால் வேறொன்றுமாக கடைந்தெடுத்த இனவாத சிந்தனையுடனேயே இதுவரை உள்ளீர்கள் , எனவே மதிப்புக்குரிய இரா சம்பந்தன் ஐயா அவர்களே !

உங்களது பிரச்சினைகளை நீங்களும் எங்களது பிரச்சினைகளை நாங்களும் இனிமேல் நேரடியாக அரசுடன்  பேசும் நிலையில் இப்போது உள்ளோம் , எனவே உங்களது பேச்சுக்களில் செயற்பாடுகளில் தமிழ் பேசும் சிறுபான்மை இனம் என்ற அடைப்புக்குள் எங்களையும் சேர்த்து பேசி எங்களது உரிமைகளையும் நீங்கள் பெறுவோரிடமிருந்து பெற்று எங்களுக்கு பிச்சை போட தயாராகும் நிலையை விடுத்து “சிறுபான்மை தமிழ் முஸ்லிம் இரண்டு இனங்கள் “என்ற இருதரப்பு உரிமைகளை வெவ்வேறாக பேரின அரசிடம் இருந்து பேசி பெற்றெடுக்க இனிமேலும் தடையாக எங்களது சந்தர்ப்பவாத தலைமைகளை உங்களது பசப்பு வார்த்தைகளுக்கு மயக்கியது போன்று வடகிழக்கில் வாழும்  தமிழ்பேசும் முஸ்லிம்களையும் மயக்கி கையாள வகை செய்யாதீர்கள் ! 

உங்களை நம்பி உங்களையும் வெல்ல வைத்து அதன் மூலம் உங்களிடமிருந்து எங்களது உரிமைகளை பெற்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை காலாவதியாகி விட்டது , அதற்கு கடந்த சமகாலத்தில் ஏற்பட்ட அரசியல் சதிக் குழப்பத்தில் நீங்கள் கையாண்ட அரசியல் அனுகு முறைகள் நல்ல முன்னுதாரணமாக போய் விட்டன , 

இறுதியாக இரா சம்பந்தன் ஐயா அவர்களே !

எங்களது மக்களும் சம உரிமையோடு ஒரு தேசிய இனம் என்ற வகையில் அவர்களது உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து சமமாக பெற உதவியாக இல்லாமல் போய் விடினும் உங்களது அரசியல் வாக்கு பாராளுமன்ற பலத்தை உபத்திரமாக பயன்படுத்த முனையாமல் இருக்க தயவுடன் வேண்டுகின்றேன் , எங்களது மக்கள் தங்களது காவலர்கள் என நினைத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கொடுத்தவர்களை உங்களது சதி நாடகத்தில் உங்கள்  பின்னே இனிமேலும் வராமல் பாதுகாக்கும் அல்லது காப்பாற்றும் கடமையை இனிமேல் அவர்கள் சரிவர செய்வார்கள் என நம்பியவனாக விடை பெறுகின்றேன் ஐயா !

நன்றி வணக்கம் 

Shm Firthows 

No comments

Powered by Blogger.