Header Ads



ரணிலுடன் காரசாரமாக, முடிந்த மு.கா. பேச்சு - தன்னிச்சையாக முடிவெடுக்கமாட்டேன் என வாக்குறுதி

- AAM. Anzir -

மு.கா. தலைவர் ஹக்கீம் தலைமையிலான குழு இன்று, வெள்ளிக்கிழமை -08- பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து முக்கிய பேச்சில் ஈடுபட்டது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தித் தருமாறு தமிழ் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை பற்றி ஆராய்வதற்கே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது காரசாரமான பேச்சுக்கள் இடம்பெற்றதாக, இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் சற்றுமுன் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

அத்துடன் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் பற்றி, தான் தன்னிச்சையாக முடிவெடுக்கமாட்டேன் எனவும் ரணில் வாக்குறுதி வழங்கியதுடன், இதுபற்றி மு.கா. மற்றும் தமிழ் கூட்டமைப்பு ஆகியன ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென குறிப்பிட்டதாகவும ஹரீஸ் மேலும் குறிப்பிட்டார்.

இசசந்திப்பின் மூலம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்காக அமைச்சரவைக்கு கொண்டு வரப்படவிருந்த அமைச்சரவைப் பத்திரம்,  தற்போதைக்கு சமர்ப்பிக்கப்படமாட்டாது எனவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

1 comment:

  1. Will see who is going to suck lollipops? Lollipops, sometimes, has bitter taste.

    ReplyDelete

Powered by Blogger.