March 20, 2019

தோழர் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரசை ஆரம்பிக்க, எனது கையெழுத்துப் பிரதியும் காரணமாக இருந்தது

TO MY MUSLIM FRIENDS
எனது முஸ்லிம் நண்பர்களுக்கு

தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் எழுதிய காலக்கட்டம்பற்றிய குறிப்புகள்.
.
MY MAIN CONTRIBUTION: MUSLIMS AND NATIONAL QUESTION - RESEARCH CONDUCTED BETWEEN 1976 TO 1980. WRITTEN IN 1981 AND PUBLISHED IN JAFFNA IN 1983. CAN ANYONE HELP ME TO TRANSLATE IT IN ENGLISH AND SINHALESE AND PUBLISH?

என் இளமையில் தமிழர் மத்தியில் செல்வநாயகம் தலைமையும் முஸ்லிம்கள் மத்தியில் சூபி ஞானிகளும் செல்வாக்கு செலுத்திய ஊர் தலமைகள் செயல்பட்டன. பரஸ்பரம் நம்பகதன்மையுள்ள சகவாழ்வு முன்னிலைப் பட்டது. 

1970 பதுகளின் பிற் பகுதியில் இருதரப்பிலும் நிலவிய பாரம்பரிய சமாதான சகவாழ்வு அமைப்புகள் சீர்குலைய ஆரம்பித்தது. இருதரப்பிலும் செல்வாக்குப் பெற்றிருந்த மக்கள் அமைப்புகளை படித்த இளைஞர்கள் பலர் மறுதலிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் படித்த தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் தமிழ் அடிப்படைவாத கருத்துகளும் முஸ்லிம் அடிப்படைவாதக் கருத்துகளும் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதுவரை நிலவிய நம்பக தன்மையும் நல்லுறவும் 1970பதுகளின் பிற்பகுதியில் சீகுலைய ஆரம்பித்தது.. 

இக்காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக் கழகத்திலும் வெளியிலும் என்னால் இயன்றவரை நல்லுறவை மீட்டெடுக்க செயல்பட்டேன். யாழ்பாணம் முஸ்லிம் தெருவில் இருந்து திக்குவலை வரைக்கும் கற்பிட்டியில் இருந்து கல்முணை வரைக்கும் அலைந்து திரிந்து திரட்டிய தரவுகளின் அடிப்படையில் “தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்” என்கிற நூலை வெளியிட்டேன். 

அதன்பின்னர் வெளிவந்த ஆய்வுகள் பலவற்றுக்கு மேற்படி நூல் உந்து சக்தியாக இருந்திருக்கிறது. 
மேற்படி நூலை அதன்பிறகு எழுதிய கட்டுரைகளுடன் சேர்த்து வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன். ஆர்வமுள்ள பதிப்பகங்களின் தொடர்பை நாடுகிறேன்.

1981ல் என்னுடைய நூலை கையெழுத்துப் பிரதியாக வாசித்த தோழர் அஸ்ரப் பாராட்டி ஊக்கமழித்தார். முஸ்லிம் காங்கிரசை ஆரம்பிக்க கையெழுத்துப் பிரதியாக வாசித்த எனதுநூல் காரணமாக இருந்ததாக தோழர் அஸ்ரப் குறிப்பிட்டிருக்கிறார். (இதுபற்றி தோழர்கள் பசீர் சேகுதாவுத் மற்றும் பவுசர் போன்ற நண்பர்களிடமும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது மறைவுக்கு சில மாதங்களின் முன்னர் இறுதியாக அவரை சந்தித்தபோது திரு செல்வநாயகம்பற்றி தந்தை செல்வா நினைவுகூர்ந்து விதந்துரைத்தார். நான் மாலை வெளிநாட்டு செல்ல இருந்தபோதும் வற்புறுத்திக் கண்டிக்கு அழைத்துச் சென்று தோழர் ரவுப் ஹக்கீமை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். (இன்று எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட முடியவில்லை என்பது துயரம்)

’தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்” நூல் 1983ல் அலை சிறு சஞ்சிகை ஆசிரியர் நண்பர் ஜேசுராசாவால் வெளியிடப்பட்டது.

இன்று தமிழரும் முஸ்லிம்களும் அச்சம் அவநம்பிக்கை அடிப்படையில்தான் அரசியல் செய்கிறார்கள். இன அலகுகள் அடிப்படையில் என் உரிமையை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன் அடுத்தவர் உரிமையை பறிக்கவும் மாட்டேன் என்கிற அணுகுமுறையையாவது நாம் இருதரப்பிலும் வளர்த்தெடுக்க வேண்டும்.
.
எனது பங்களிப்பான “முஸ்லிம் மக்களும் தேசிய இனப்பிரச்சினையும்”
.MY MAIN CONTRIBUTION: MUSLIMS AND NATIONAL QUESTION

1 கருத்துரைகள்:

முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருப்பவர்களைத் தவிர தங்கள் நண்பர்களை கண்டுகொள்ளமாட்டார்கள் என 1976ல் இருந்தே தமிழர்கள் என்னை கிண்டல் செய்வதுண்டு. கடந்த கடந்த நாற்பது வருடங்களாக முஸ்லிம்கள் தொடர்பாக எழுதிவருகிறேன். என்னுடைய கருத்துக்களை வெட்டியோ ஒட்டியோ விவாதிக்கக்கூட யாரும் முன்வருவதில்லை. எடுத்தாளும்போது மேற்கொள்காட்டுவதில்லை. நான் கவலைப்படவில்லை. எனினும் இது ஆரோகியமான போக்கல்ல

Post a Comment