Header Ads



நியுஸிலாந்து தாக்குதலை, ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது - உயிர்நீத்தவர்களுக்காக பிராத்திக்க கூறுகிறது

15.03.2019 அன்று நியுஸிலாந்தின் பள்ளி வாசலில் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. இவ்வாறான தாக்குதல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக உரிய தரப்பினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இஸ்லாம் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற, பயங்கரவாதத்திற்கு இடமளிக்காத மார்க்கமாகும். இவ்வாறான மனிதபிமானமற்ற தாக்குதல்கள் உலகலாவிய ரீதியில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் சீர் குலைப்பவையாகவே இருக்கின்றது.

இப் பயங்கரவாதத் தாகுதல்களுக்கு இலக்காகி உயிர் நீத்த மக்களுக்காக அனைவரும் பிராத்திக்குமாறும், மறைவான ஜனாஸா தொழுகையை ( الصلاة على الميت الغائب) தொழுமாறும், இது விடயத்தில் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் கூடய கவனம் செலுத்துமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிராத்தனை செய்கின்ற அதே நேரம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.


அஷ்-ஷைக் எம்.எச் உமர்தீன் 
பிரச்சாரக் குழு செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

3 comments:

  1. மேற்கு நாடுகளில் அப்பாவி மக்களை கொலை செய்து பயங்கரவாத்தில் ஈடுபடும் ISIS யை ஏன்கண்டிப்பதில்லை சார்?

    ReplyDelete
  2. யா அல்லாஹ்!
    அநியாயம் இழைக்கப்பட்ட அந்த அனைத்து மக்களின் தவறுகள் பாவங்களை மன்னிப்பாயாக! உனது உயர்ந்த சந்திப்பையும், சுவனத்தையும் அவர்கள் அனைவர்களுக்கும் கொடுத்தருளுவாயாக!

    ReplyDelete
  3. மிஸ்டர் விளக்கெண்ணெய் அஜன்,

    ISIS என்பது தீவிரவாத அமைப்பு, இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்புமில்லை, இஸ்லாம் இவர்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு வழிகாட்டவுமில்லை என்பதை உலகிலுள்ள முஸ்லிம் அமைப்புக்கள், அரசுகள் சொல்வதற்கு முன்னர் ACJU வே உத்தியோக பூர்வமாக அறிவித்தது மட்டுமல்லாது, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கங்களிலும் தொடர்ச்சியாக உரைகளை நிகழ்த்தியது. அவர்களின் தொடர்ந்தேர்ச்சியான நடவடிக்கைகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு ISIS தீவிரவாதிகள் தொடர்பில் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்கள்.

    ஆனால் அஜன் அண்ணனுக்கு ஒருவகை மனநோய் இருப்பதால் தொடர்ந்து ISIS வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

    "எவனொருவன் ஒரு மனிதரை (முஸ்லிமோ, முஸ்லிமல்லாதவனோ) கொலை செய்கின்றானோ அவன் மனித குலத்தையே கொன்றவன் போலாவான். எவனொருவன் ஒரு மனிதரை (முஸ்லிமோ, முஸ்லிமல்லாதவரையோ) வாழ வைத்தானோ அவன் மனித குலத்தையே வாழ வைத்தவன் போலாவான்." - இதுவே இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டியது. இதன் அடிப்படையில் சவூதி மன்னர் ஒருவரை கொலை செய்தாலும் அவர் மனித குலத்தையே கொன்ற பாவியாவார். சம்பந்தன் ஐயா ஒரு மனிதரை வாழ வைத்தாலும் அவர் மனித குலத்தையே வாழவைத்தவர் போலாவார்.

    ReplyDelete

Powered by Blogger.