Header Ads



“பூ அபிமானி” ஹரித ஹரசர சூழல் பாராட்டு விழா


சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தினால் சூழல் நேய தேசமொன்றை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “பூ அபிமானி” ஹரித ஹரசர சூழல் பாராட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (18) பிற்பகல் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது.

இலங்கையின் கனிய வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதன் மூலம் ”பேண்தகு எதிர்காலம் - அபிவிருத்தி அடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் தனது தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றி கனிய வளங்களை பாதுகாப்பதற்காகவும் சுற்றாடலின் பொது நலனுக்காகவும் மேற்கொண்ட உன்னத பணிகளை பாராட்டி ஜனாதிபதி அவர்களினால் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தனித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புவிச்சரிதவியல் கொடி ஜனாதிபதி அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, புவிச்சரிதவியல் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல, பணிப்பாளர் நாயகம் கலாநிதி சீ.எச்.ஈ.ஆர்.சிறிவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. Well done Sir M.R.L We Salute you May Allah Almighty bless you and your family.

    ReplyDelete

Powered by Blogger.