Header Ads



கோத்தபாயவின் தீர்க்கமான முடிவு, அமெரிக்க கடவுச்சீட்டுக்கு குட் பாய்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடும் விண்ணப்பத்தை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கையளித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தான் முன்வைத்துள்ள விண்ணப்பத்தை அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் பின்னர் சத்தியக் கடிதம் ஒன்றையும் அமெரிக்க கடவுச்சீட்டை கோத்தபாய கையளித்துள்ளார்.

புத்தி சுயாதீனம் இன்மை மற்றும் சிறு வயதில் விண்ணப்பிக்கும் குடியுரிமையை இரத்துச் செய்யும் விண்ணப்பங்களை மாத்திரமே அமெரிக்க ராஜாங்க திணைக்களம் நிராகரிக்கும் என கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளார். இராணுவ கொள்கைகளை கொண்ட கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற முடியாது எனவும் இதனால், அவர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. வா ராசா வா
    உனக்கு விழுகிற அடியிலே இனி ராஜபக்சே குடும்பமமே அரசியலில் இருந்து ஒதுங்கும்.

    ReplyDelete

Powered by Blogger.