Header Ads



குண்டு வீசி, காடுகளை அழித்த இந்தியா - ஐ.நா.வில் முறையீடு செய்ய பாகிஸ்தான் தீர்மானம்

குண்டு வீசி காட்டை அழித்து சுற்றுச்சூழல்-பயங்கரவாதத்தை ஏற்படுத்தி உள்ளது என இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஐநாவில் புகார் கூற திட்டமிட்டு உள்ளது.

பிப்ரவரி 14-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவுப்பெற்ற ஜெய்ஷ் இ முகமது இயக்கம் புல்வாமாவில் தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது  இயக்கம் நடத்திய தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.

இந்தநிலையில், ஐ.நா.வில் இந்தியாவுக்கு எதிராக  '' சுற்றுச்சூழல்-பயங்கரவாதம் '' என்ற ஒரு புகாரை அளிக்க பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது என பாகிஸ்தான் சுற்றுசுழல் அமைச்சர் மாலிக் அமின் அஸ்லம் ராய்ட்டர்ஸ்க்கு தெரிவித்து உள்ளார் என்று பாகிஸ்தான் இணையதளம் டான் செய்தி வெளியிட்டு உள்ளது.

மேலும் அதில் இந்திய விமானங்கள் ஒரு "காடு அழிப்பு " குண்டுவீசி தாக்கியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான்  அரசாங்கம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொண்டது, இது ஐக்கிய நாடுகள் மற்றும் பிற மன்றங்களில் ஒரு புகாரை அடிப்படையாகக் கொண்டது. டஜன் கணக்கான பைன் மரங்கள் அழிக்கபட்டு இருக்கின்றன் . "கடுமையான சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டிருக்கிறது."எனகூறி உள்ளார்.

No comments

Powered by Blogger.