Header Ads



சஜித் - மஹிந்த வாக்குவாதம், உரையாற்றும் போது திடீரென ஒழுங்குப்பிரச்சினை

ஜனாதிபதி தேர்தல் குறித்தும், ஜனாதிபதி பதவி குறித்தும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சபையில் இன்று வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் சினிமாத்துறை, கலைத்துறை மற்றும் கலைஞர்களின் நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச பதில் தெரிவித்துக்கொண்டிருந்த நேரம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட கலையுடன் தொடர்புபட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை நிறுத்தியதாகவும் இந்த ஆட்சியில் அவை மீண்டும் முன்னெடுக்கப்பட்டதாவும் தெரிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் காலம் உள்ளது என கூறினார். 

இதன்போது பதில் தெரிவித்த அமைச்சர் சஜித் :- நீங்கள் என்னை ஜனாதிபதியாக கற்பனை செய்கின்றீர்களா, இதை என்னும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் இவ்வாறு நினைப்பீர்கள் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் இப்போது நான் கூறுவது ஜனாதிபதி குறித்த விடயம் அல்ல. இது உங்களின் காலத்தில் இடம்பெற்ற கலை அடக்குமுறை குறித்து நீங்களே எழுப்பிய கேள்விக்கான பதில். இந்த பதில்களை கூறும்போது உங்களால் கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை. காதுகள் வலிக்கின்றது என நினைக்கின்றேன். ஆனாலும் நான் இதனைக் கூறியே ஆகவேண்டும் என்றார். 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

1 comment:

  1. DRAMA.. Sajith is a Man of Rajapaksa.
    Sajith He will do anything for M. Rajapaksa's.s wish...

    ReplyDelete

Powered by Blogger.