Header Ads



5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை, ரத்துச்செய்ய மகிந்த எதிர்ப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அலுபோமுல்ல மஹிந்த வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைய நாட்களில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

புலமமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்பட்டால் கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் நகர பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை உருவாகும் என மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையினால் பெற்றோர் பிள்ளைகள் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என்பது உண்மையே, எனினும், புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவியருக்கு பிரபல பாடசாலைகளில் கல்வி கற்க சந்தர்ப்பம் கிடைத்தது.

புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்பட்டால் அதற்கு மாற்று திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என அரசாங்கம் கூறினாலும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மைதானங்கள் இல்லாவிட்டால் அதனை எவ்வாறு சிறந்த பாடசாலை என கூற முடியும் என மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. Say No To Grade 5 Scholarship.
    Mr. Mahinda don't worry its Very Easy. By giving admission for good students in leading schools in the City for the student all our the country.
    By doing this villages well talented student can join/Study easily in leading School...

    ReplyDelete

Powered by Blogger.