March 24, 2019

கோத்தபாயவுக்கு 4 ராஜபக்சக்களும் பச்சைக்கொடி காட்டினர்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் இதற்கு ராஜபக்சவினரின் ஆசி கிடைத்துள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமாயின் எமக்கு அரசாங்கம் அவசியம். எமக்கென்ற ஜனாதிபதி அவசியம். எந்த அமைப்புகள் என்ன கூறினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

இந்த தீர்மானத்திற்கு மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் இணக்கம் கிடைத்துள்ளது.

நாட்டு மக்களையும் நாட்டையும் அபிவிருத்தி செய்ய நாட்டுக்கு சிறந்த தலைவர் அவசியம் எனவும் அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏகமனதாக தெரிவு செய்துள்ள வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச. அவரை வெற்றி பெறச் செய்ய நாங்கள் தயாராகியுள்ளோம்.

அதற்காகவே நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானோர் எம்முடன் உள்ளனர். இதனால், எமக்கு வேறு தலைவர்கள் குறித்து சிந்திக்க முடியாது.

மகிந்த ராஜபக்சவின் ஆசியுடன் வரும் கோத்தபாய ராஜபக்சவுக்கு மட்டுமே எம்மால் ஆதரிக்க முடியும் எனவும் பியல் நிஷாந்த கூறியுள்ளார்.

4 கருத்துரைகள்:

படுபொய்யைப் பசப்புகிறார்கள். சிறு பான்மையினல் குறிப்பாக மிகக் கவனமாக செய்திகளை அணுக வேண்டியா காலம் இது.

மீண்டும் பாசிச புலிகளும்,டயஸ் போராக்கலும் வந்து விட்டார்க.எனவே உங்க ஆட்சி தேவை.ஆனால் யார் ஆட்சி அமைத்தாலும் Muslim சமூகத்துக்கு எந்த பலனும் இல்லை.but,UNP ஆட்சியில் இந்த பாசிச காட்டெரிக Muslim சமூகத்துக்கு எதிரான மிகப் பெரும் திட்டங்கள் தயரித்து வைத்துகொண்டு சரியான நேரம் வரும் வரை காத்துக்கொண்டிருக்கின்ரனர்.மஹிந்த ஆட்சியில் டயஸ் போராக்கல் சில பெரும்பாண்மை இனவாத கும்பலுக்கு காசை கொடுத்து கோத்தாவை சிக்க வைத்து அலுத்கமை பிரச்சினை உருவாக்கப்பட்டது.ஆனால் இப்போது மஹிந்த & கோ அந்த மாபெரும் தவறை புரிந்து கொண்டுவிட்ட்னர்.ஆனால் இவர்கள் ஆட்சியில் எத்தனை சம்பவம் (கண்டி,கிந்த்தோட்டை,அம்பாறை)கலவரங்கள் எத்தனை அல்லாஹ்வின் வீடு,எததனை Muslim வர்த்தக நிலையங்கள் இரவு நேரத்தில் எரீக்கப்பட்டன.இவை அனைததும் அல்லாமல் Muslim வீவாக சட்டத் திருத்தம் தொடங்கி வட கிழககு இணைப்பை கொண்டு வருவது வரை டயஸ் போராக்கலும்,மீதமுள்ள பாசிச புலிகளும் மறைமுகமாக செயல்படுகின்ர்னர்.இப்போதய நிலமையில் நாட்டின் முக்கிய நகர்வுகல் அனைதும் இந்த பாசிச புலிகள் சார்பானவர்கலின் முலுக் கட்டுப்பாட்டில்.எனவே நம் சமூகத்துக்கு மஹிந்தவோ ரனிலோ யார் வந்தாலும் எந்த பிரயோசனமும் இல்லை.ஆனால் ரனிலின் ஆட்சீயீல் இந்த பாசிச கும்பல் சுதந்திரமாக Muslim எதிர்ப்பு நடவடிக்கையை பெரும்பாண்மை இனவாத கும்பலுக்கு காசை கொடுத்து மிக வேகமாக காய் நகர்துகின்ரது.மூதுரில் Muslim மக்கள் புலிகளால் வெளியே அனுப்பபட்ட போது 2 நாட்கள் முடியும் முன்னம மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பினார்கல் மஹிந்த ராணுவத்தை கொண்டு வேகமக Muslim நிலங்களை காப்பார்த்தினர்.ஆனால் மன்னார்,வடமாகான Muslim மக்கள் பாசிச புலிகளால் வெரட்ட பட்டபோது UNP ஆட்சியில் என்ன நடந்தது எண்டு உங்கள் அனைவருக்கும் தெரியும்.இன்னும் அந்த மக்கள் முலுதாக அங்கே செல்லவில்லை.மஹிந்த ஆட்சியில் அவர்களுக்கு கொடுககப்பட்ட அவர்கள் வாழ்ந்த நிலத்தை இப்போது இவர்கள் ஆட்சியில் அது வனப் பகுதி என சொல்லி எத்தனை தடைகல்,நீதி நடவடிக்கைகள்.எனவே புலி டயஸ் போராக்கலின் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகின்ர் இந்த ஆட்சியை விட மஹிந்த ஆட்சி நல்லம் போல் இருக்கின்ரது.இல்லாவிட்டால் TNA ஒரு போதும் இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கல்.ஒட்டுமொத்தத்ததில் இந்த ஆட்சி பாசிச புலிகள் கட்டுபாட்டில்.muslim சமூகத்துக்கு இது மிகப் பெரும் ஆபத்து

ஞானசார பிறந்த களுத்துறையில் ஒன்றும் நடக்காது. அதே மாவட்டத்தில் அழுத்கமையில் நீங்கள் செய்த அட்டகாசத்தை அவ்வளவு விரைவில் முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.

சகோதரர் Mohamed மஹிந்த ஆட்சீயில் கோத்தாபாயவிடம் mr.janasara அவர்களை அரிமுகப்படுத்தி அவரை தாலாட்டி நீராட்டி வளர்த்து அழுத்கம பிரச்சினையின் போது அவரை fazil Rajapakse யின் கோபத்தில் அவரிடமும் அகப்படாமல் காப்பாற்றிய 2 முக்கிய அமைசர்கல் இந்த ஆட்சியில் உள்லார்கல்.ஆனால் காத்தான்குடி பல்லியில் தொழுதவர்கலை 100 அதிகமானவர்கலை சுட்டுக் கொன்ரது,ஏறாவூரில் பெண்கல்,பச்சிலம் பாலகர்கலை வெட்டிக் கொன்ரது,மன்னார்,வடமாகன Muslim மக்களை விரட்டியது இன்னும் எவ்வலவொ அட்டுலியங்கல்.இருதி யுத்த நேரத்தில் (போர்வை masjid) தட்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியது இன்னும் எவ்வழவோ அட்டூலியங்கல்.இவை அனைத்தையும் செய்த புலிகளை அவர்களின் சார்பானவர்கழும் இருப்பதும்,ஆட்சியை கொண்டுசெல்வதும் இந்த ஆட்சியில்.மஹிந்தவோ,ரனிலொ எம்மை தூக்கி தலையில் வைக்கப்போவதில்லை.ஆனால் இப்போதய ஆட்சி பாசிச புலிகள் சார்பாக இருக்கின்ரது

Post a Comment