Header Ads



4 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை

உயர்வடைந்து வரும் வெப்பநிலைக் காரணமாக இன்று -21- புத்தளம், மன்னார், கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களையும் வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை பகுதிகளாக அறிவித்துள்ளது.

மேற்படி நான்கு மாவட்டங்களிலும் 32 முதல் 41 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்குமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிதீவிர உஷ்ண  நிலை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் Sun Stroke (பக்கவாதம்) போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் தேவையானளவு நீர் அருந்துவதுடன் நிழலான இடங்களில் இருக்க வேண்டுமென்றும் வயதானவர்கள் மற்றும் நோயாளர்களிடத்தே கூடுதல் கவனம் தேவையென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் குழந்தைகளை மூடிய வாகனத்தில் தனித்துவிட்டுச் செல்லக்கூடாது என்றும் வெட்டவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.