Header Ads



3 முஸ்லிம் அமைச்சர்களுக்கு, கொலை அச்சுறுத்தல் - பாதுகாப்புக் கோரி விண்ணப்பம்


அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், கபீர் காசிம், மற்றும் றிசாத் பதியுதீன் ஆகீயோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாருடன் தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து jaffna muslim இணையத்திற்கு அறியவருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட 3 முஸ்லிம்  அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சிடம் முறையிட்டுள்ளதுடன் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிசாரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மற்றுமொரு சிங்களப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின் தமிழாக்கம் பின்வருமாறு,,

2

ரகசியமாக இயங்கும் அடிப்படைவாத குழுவொன்றினால் மூன்று அமைச்சர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்

ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தங்களுக்கு விஷேட பாதுகாப்பு வழங்குமாறும் மூன்று சிரேஷ்ட அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவினதிடம்   கோரியுள்ளதாக தேஷய நாளிதழ் முன்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.

2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை அரசியல் வாதிகளுக்கு அடிப்படைவாத குழுவினால் மரண அச்சுருத்தல் நிலவுவதாக முறையிடப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென பாதுகாப்பு தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்பில் இயங்கும் இந்த ரகசிய அடிப்படைவாத குழு நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை மக்களிடையை இனரீதியாக  முருகல் ஏற்படுத்த திட்டமிட்டு இயங்கிவந்துள்ளமை இலங்கை அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த குழுவின் முக்கிய 4 நபர்களை புலனாய்வு பிரிவினர் தற்போது இனங்கண்டுள்ளதாகவும் அவர்கள் மிக ரகசியமாக பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என  தெரியவந்துள்ளது.

அட்டாளைச்சேனை , பொலன்னறுவை , மாவனல்லை , புத்தளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  இந்த குழுவுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் சிறு  அசம்பாவித சம்பவங்களை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் குறித்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. 1971 மற்றும் 1989l சொந்த இன இளைஞர்களையும் 2009ல் தமிழரையும் கொன்று குவித்த சிங்கள பெளத்த அரசு இன்று வலுவான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்ச்சியில் உள்ளது. முஸ்லிம் பெற்றோர்கள் சமய தலைவர்கள் அரசியல்வாதிகள் எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் தலையிட்டு நிலமையின் சிக்கலை அவிழ்த்து பிள்ளைகளை காப்பாற்றவேண்டும். என் அனுபவத்தில் “பேசாமல் இருந்துவிட்டு உங்கள் பிள்ளைகளை காட்டிக் கொடுக்காதீர்கள் உடனடியாகத் தலையிட்டு அவர்களை நல்வழிப்படுத்திக் காப்பாற்றுங்கள்”

    ReplyDelete

Powered by Blogger.