March 28, 2019

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்காக, ஒருவரைத் தவிர ஏனைய 224 எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தைக்கூட வழங்க மறுக்கும் இந்த அரசாங்கம்  எமது மக்களுக்கு எப்படி அரசியல் தீர்வை வழங்குமென என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று சபையில் கேள்வி எழுப்பினர்.

1992-1993 ஆம் ஆண்டு 28  பிரதேச  செயலகங்களை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான வர்த்தமானியும்   வெளியிடப்பட்டது. 

இதனையடுத்து 27 பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டு அவற்றுக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டபோதும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படாது அதிகாரங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டது. 

இது பாரதூரமான  குற்றம். அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை ,நீதி  மறுக்கப்பட்டுள்ளது. தமிழினம் தனது நிர்வாகத்தை ,நிதி அதிகாரத்தை ,காணி அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாதென திட்டமிட்டுத் தடுக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்காக இந்த சபையிலுள்ள ஒருவரைத் தவிர ஏனைய 224 எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

5 கருத்துரைகள்:

ஏண்டா பரதேசி உண்ட அப்பன் வீட்டு சொத்துபோல் எடுத்துக்கொள்ள கல்முனையை நீ திருட்டு தனமாக அபகரிக்க நாம் விட்டுவிடுவோமா? தேர்தல் நெருங்கும்போது இனவாதம் கதைச்சு மக்களை ஏமாற்றும் இழிவான அரசியல் நீ தான் செய்கிறாய். ஏன் வரவு செலவு திட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்கலாமே

முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ தங்கள் உரிமை என்று கருதுவதற்காகக் குரல்கொடுப்பது ஒருபோதும் இனவாதமல்ல. மாற்று கருத்துக்களை தெரிவிக்கிறதும் ஜனநாயகரீதியாக மாறுபட்ட நிலைகள் எடுப்பதும் ஆரோக்கியமான விவாதங்களாகும். கல்முனைக்குடி சாய்ந்தமருது கல்முனைவடக்கு தமிழ் என்கிற பிரிவு மக்கள் மனசில் வலுவடைந்துள்ளது. இந்த நிதர்சனத்தை நெடுங்காலத்துக்கு மறுதலிக்கும் வாய்ப்பில்லை. மூன்றாவது தரப்பான சிங்களவர் தலையிட்டு அப்பம் பகிரமுன் ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

Are we not going to live together as tamil speaking community Mr Jeyabalan? We asked for a coastal district but it was opposed by other tamil speaking community. This shows still there is a division whether you speak tamil or not. Kalmunai is areawise very small and unjustifiable for three divisions. This is the reality. Therefore before it get worsen we have to sit on a table and find a solution agreeable by the parties concerned.

@Gtx W, எந்த பாடசாலையில படித்தீங்க?

seeni mohamed sideeque நண்பா, நாங்கள் தமிழ்பேசும் மக்கள் என ஒன்றாக வாழப்போவதில்லையா என நீங்கள் கேட்கிற ஏக்கத்தைப் புரிந்துகொள்கிறேன். கல்முனையில் கூட்டுக் குடித்தனம்தான் குடும்ப ஒற்றுமைக்கு வழி என்கிற சூழல் நிலவினால் என்னைவிட அதிகம் மகிழ்பவன் யாராக இருக்க முடியும். ஆனால் கல்முனைக்குடி தவிர்த்து சாய்ந்த மருது மற்றும் தமிழ் பகுதிகளில் தனிப் பிரதேச சபை தனிப் பிரதேச செயலக கோரிக்கை ஆழமாக வேரூன்றிவிட்டது. அங்கெல்லாம் தனிக்குடித்தனம் மட்டுமே ஒற்றுமைக்கு வழி என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இது நம் முடும்ப மட்டங்களில் முன்னோர் எதிர் நோக்கிய பிரச்சினைதானே. கல்முனை சிறிய பிரதேசம் தனிக்குடித்தனத்தை ஏற்க்க முடியாது என்கிற முன் நிபந்தனை அடிப்படையில் கல்முனை பிரச்சினையின் தரப்புகள் உட்கார்ந்து பேச வாய்புள்ளது என நீங்கள் நம்புகிறீர்களா? தமிழ் முஸ்லிம் சமூக அரசியல் மாணவன் என்கிற வகையில் உங்கள் நம்பிக்கை கழ யதார்த்தமானல் மகிழ்வேன்

Post a Comment