Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் Unp வெற்றி உறுதி, தெற்கு மக்கள் எமது கட்சியோடு கூடிய தொடர்பு இல்லை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சிக்கு வெற்றி பெற முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.  

வெலிகம கொடவில விளையாட்டு திடலில் இடம்பெற்ற மாத்தறை மாவட்ட பெருந்தோட்ட கைத்தொழில் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,  தெற்கு மக்கள் எமது கட்சியோடு கூடிய தொடர்பு இல்லை. அதனை வாக்குகள் எண்ணும் போது தெரிய முடிகின்றது. நாம் நல்லதைச் செய்யவே இங்கு வந்துள்ளோம்.

மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்குத்தான் வாக்களித்தனர்.

அது எமக்கு பிரச்சினை இல்லை. நாம் ஏனைய மாவட்டங்களில் வெற்றி பெறுவோம். யாருக்கும் வாக்களிக்க முடியும். அது அவர்களது உரிமை. இவ்விடத்தில் இருப்பவர்களும் மொட்டுக்கு வாக்களித்தவர்கள் இருக்கலாம்.

அது பிரச்சினை இல்லை. அது அவர்களது ஜனநாயகம்.  அதற்காக நாம் கோபிக்கவில்லை. அவ்வாறு கோபித்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது.

எனினும் கண்டி, பதுளை, நுவரெலியா மாவட்டங்களுக்கு சென்று பார்த்தால்  மாற்றங்களை  காண முடியும்.  

மக்கள் தான் அரசை அமைப்பதும் நீக்குவதும். இது குடும்பத்துக்கு குடும்பம் கைமாறுகின்ற ஒன்று அல்ல. அவ்வாறான முறையும் கிடையாது என்றார்.  

இதில் தென் மாகாண சபை உறுப்பினர்களான கயான் ஸன்ஜீவ, சதுர கலப்பத்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

No comments

Powered by Blogger.