Header Ads



ஜனாதிபதி சட்டத்தரணிகளை, போட்டுத்தாக்கிய ரஞ்சன்

ஊழல்வாதிகளையும் கள்ளர்களையும் தண்டிப்பதில் உள்ள மிகப்பெரிய தடையாக ஜனாதிபதி சட்டத்தரணிகளே உள்ளனர். எத்தனை ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது போகின்றமைக்கு இவர்களே காரணமாக உள்ளனர் என இரஜாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக தெரிவித்தார். 

பாரிய நிதி மோசடி மற்றும் பிணைமுறி ஊழல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இலஞ்ச ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க எடுக்கும் முயற்சிகள் தடுக்கப்படுகின்றமை குறித்து எமக்கும் பாரிய அதிருப்தி உள்ளது. இன்று  எமது நாடு குறித்து மக்களுக்கு பாரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

மக்களே  கள்ளர்களை தடிக்க ஆணையை  கொடுத்தனர். நாம் ஆட்சிக்கு வந்து நன்றாக வேலைகளை ஆரம்பித்தோம். கள்ளர்களை பிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அனைத்தும் நாசமாக்கப்பட்டது. இதுதான் மக்கள் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வேதனைக்கான விளைவுகள் நாம் அனுபவிக்கவேண்டிவரும் என்பது எனக்கு தெரியும். சிறைச்சாலையில் அர்ஜுன் அலோசியஸ் சுகமாக வாழ வசதிகளை செய்து கொடுத்தது யார்? கள்ளர்களை காப்பாற்றுவது யார்? இந்த கேள்விகளுக்கு பதில் எனக்குத் தெரியும். தலைமைத்துவம்  செய்யும் தவறுக்கு அனைவரும் பொறுப்புக்கூறவேண்டியுள்ளது. 

இலங்கையின் சட்ட நகர்வுகளின் படி  சிறந்த ஜனாதிபதி சட்டத்தரணியை பிடித்துக்கொண்டால் எந்தக் குற்றவாளியும் தப்பிக்க முடியும். குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் அவர்களை தண்டிக்க முடியாத சட்டமே உள்ளது. இது தான் மக்களின் வேதனையாக அமைந்துள்ளது. கள்ளர்களை தண்டிக்கும்  நடவடிக்கையில் அரசியல் வாதிகளை போலவே சட்டவாதிகள், நீதித்துறையினர் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

கள்ளர்களை தண்டிப்பதில்  உள்ள மிகப்பெரிய தடையாக ஜனாதிபதி சட்டத்தரணிகளே உள்ளனர். குற்றவாளிகளை தண்டிக்க முடியாது போகின்றமைக்கும் இதுவே காரணமாகும். நல்லவர்கள் உள்ளனர் என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதேபோல் குற்றவாளிகளை காப்பாற்ற பலர் உள்ளனர். இவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளக்கூடாது. ஊழல் குற்றவாளிகளை தண்டிக்கும் முயற்சிக்கு எந்த ஆட்சியிலும் தடை இருக்கக்கூடாது. குற்றவாளிகளை தண்டிக்கும் விடயத்தில் அனைவரும் ஒன்றினைவோம். பாராளுமன்ற சலுகைகளை பெற்றுக்கொள்வதில், வாகான உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில், தொலைபேசி சலுகளை பெற்றுக்கொள்வதில், பாராளுமன்றத்தில் தரமான உணவுகளை பெற்றுக்கொள்வதில் ஒன்றினையும் அரசியல்வாதிகள் ஏன் ஊழல் குற்றவாளிகளை தண்டிப்பதில் ஒன்றினைவதில்லை. ஆகவே குற்றவாளிகளை தண்டித்து நாட்டினை தூயமையாக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.