Header Ads



கஞ்சாவையும், சாரயத்தையும் ஆதரிக்கும் ரஞ்சன்ராமநாயக்கா

சாரயம், கஞ்சா என்பவற்றுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையெனவும், பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் ஹெரோயின் மற்றும் கொக்கேன் போன்ற போதைப் பொருட்களையே இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து தனியார் வானொலி ஊடகமொன்று அவரிடம் வினவியதற்கே இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து சில உயர் அதிகாரிகள் தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு அதனை வெளிப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. அவ்வதிகாரிகளுக்கு அவர்களின் அதிகார எல்லைக்கு அப்பால் அதனைப் பேச முடியாதுள்ளது.

சில அரசியல்வாதிகள் போதைப் பொருள் பாவிக்கும் நிலைமைக்கு உட்பட்டுள்ளனர். இதனால், அதற்கான வியாபாரத்துக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்குபவர்களாக அவர்கள் மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹெரோயின், கொக்கேன் என்ற போதைப் பொருட்கள் தங்களது உடம்புக்குள் செலுத்தப்பட்டால், தனது தாய் சகோதரியையும் துஷ்பிரயோகம் செய்யும் பயங்கர நிலைமை உள்ளது. இதற்கு அடிமையானவர்கள் பணம் இல்லாத போது கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

ஆனால், சாராயம், கஞ்சா என்பவற்றுக்கு அடிமையானவர்களிடத்தில் இந்த ஆபத்தான நிலைமை காணப்படுவதில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

பீடி குடிப்பவன்தான், சிக்கரெட் குடிக்க தயாராகின்றான். கஞ்சா அடிப்பவன் தான் ஹெரோயினை நோக்கி நகர ஆரம்பிக்கின்றான். ஒன்றில் இன்பம் கண்டு சலிப்படையும் போது அதனை விடவும் போதையுடைய பொருளை நாட முயற்சிக்கின்றான்.  மதுசாரமும் இதற்கு விதிவிலக்கல்ல. குடிகாரனாக மாறியதன் பின்னர் அவன் எதனையும் குடிக்க தயாரான நிலையிலேயே காணப்படுகின்றான்.

இந்த உண்மையை மறைக்க முடியாது.  ஒன்றை எதிர்ப்பதற்காக தடுக்கப்பட்ட இன்னுமொன்றை அனுமதிப்பது சரியான வழிமுறையாகாது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.