Header Ads



சேற்றால் அடிவாங்கிய பிள்ளையே அபாயாவை, கழுவிவிட்டு சும்மாவிருந்தால் நாம் என்ன செய்யமுடியும்?

பல்கலைக்கழக பகடிவதைக்கு எதிராக இறுக்கமான சட்டங்கள் நாட்டில் இருக்கின்றனவா? இருக்கின்றன. பல்கலைக்கழக பகிடிவதையை ஒழிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றனவா?  முழுமையாக வழங்குகின்றன. 

சேற்றுத் தண்ணீர் அடித்து ஓட ஓட விரட்டப்பட்ட மாணவிகளில் யாராவது தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்திலோ, பல்கலைக்கழக நிர்வாகத்திடமோ முறையிட்டிருக்கிறார்களா? 

(தெரிந்தவரை) இல்லை. 

பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் யாராவது பொலிஸையோ, பல்கலைக்கழக நிர்வாகத்தையோ நீதி கேட்டு அணுகியிருக்கிறார்களா? 

(தெரிந்தவரை) இல்லை. 

சேற்றுத் தண்ணீரால் அடிவாங்கிய பிள்ளைக்கு அது ஒரு பிரச்சனை இல்லை. அல்லது அவர்களின் பெற்றோர்களுக்குக் கூட அது ஒரு பிரச்சனை இல்லை. பிறகு நாம் மட்டும் அதை ஏன் ஒரு பிரச்சனையாகத் தூக்கிக் கொண்டு நியாயமும், நீதியும் கேட்டு எழுதிக்கொண்டும் குரல் கொடுத்துக்கொண்டும் இருக்க வேண்டும்.?

தனக்கு இழைக்கப்படும் ஒரு அநியாயத்திற்கு முதலில் குறித்த பிள்ளைகளோ, அல்லது பெற்றோர்களோ ஒரு முதற்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி ஒரு முறைப்பாடு செய்யும் பிள்ளையை பாதுகாக்கவும், அதற்குத் தேவையான கல்விசார் ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கவும் சகல பல்கலைக்கழக நிர்வாகங்களும் நூறுவீதம் தயாராக இருக்கின்றன. 

அவ்வாறான பகடிவதைகளுக்கு எதிராகப் பாய்ந்து வந்து நடவடிக்கை எடுக்க சட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. 

ஆனால் அவ்வாறு ஒரு முறைப்பாட்டைச் செய்ய எந்த மாணவனும், அவனது பெற்றோரும் தயாரில்லை.

"நமக்கு எதுக்கு ஊர் வம்பு" என்று ஒதுங்கியோ, அல்லது "இருக்குற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிடனும்டா" என்று பதுங்கியோ இருந்துவிட்டுப்போகப் பார்க்கின்ற சுய நலமிகளுக்காக நாங்கள் ஏன் குரல் கொடுக்கு வேண்டும்? 

யாராவது வேலை வெட்டி இல்லாத, பிழைக்கத் தெரியாத சிலர் போராடி, வழக்குத் தொடுத்து இந்த பகிடிவதையை இல்லாமலாக்கட்டும் என்ற எண்ணத்தில்தானே பிள்ளைகளும் பெற்றார்களும் இருக்கிறார்கள்... 

தனது சுய கௌரவத்திற்கும், தன்மானத்திற்கும் இழைக்கப்படுகின்ற ஒரு அநீதிக்கு எதிராகக் கூட முறைப்பாடு செய்யவோ, அதை எதிர்த்து கேள்வி கேட்கவோ இயலாத, அதைப் பொறுத்துப்போகிற அல்லது ஏற்றுக்கொள்கிற ஒரு 22 வயதுப்பிள்ளை பட்டப்படிப்பை முடித்து இந்த சமுகத்தில் எதைத்தான் சாதித்துவிடப் போகிறது?

A/L படிக்கும்போது தனது மகளுக்கு ஒருவன் சேற்றுத் தண்ணீரை அடித்திருந்தால் ஒரு தந்தை எப்படி ரியக்ட் பண்ணி இருப்பார்? அந்தப் பிள்ளையின் வாப்பா சாரனை மடித்துக் கொண்டு தண்ணீர் அடித்தவனுக்கு செவட்டையில் இரண்டு கொடுத்து பொலிஸூக்கு தற தற வென இழுத்து வந்திருப்பார். 

ஆனால் இங்கு முறைப்பாடு செய்வதற்குக் கூட யாரும் தயாரில்லை. பல்கலைக்கழகங்கள் பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன. ஆனால் முறைப்பாடு செய்வதற்கு யாருமே முன்வருகிறார்கள் இல்லை என்று பல்கலைக்கழகங்கள் நொந்துகொள்கின்றன. 

சிறிய வயதில் இருந்து "நீ உன்ட வேலைய பாத்துட்டு இருக்குற தானே... எதுக்கு ஊர் வம்பு" என்று அநீதிகளுக்கு எதிராக வாய் மூடி பிள்ளைகளை வளர்த்ததன் அறுவடையைத்தான் இன்று அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த சமூகத்தின் மீதான சாபம்.

அதிகாரத்திற்குப் பயமில்லாமல், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமில்லாமல் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்குமாறு பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்ப்பதில்லை. பெற்றோர்களை அவர்களின் பெற்றோர்கள் வளர்க்கவில்லை. எல்லோரும் எப்படியாவது Safe Zone இல் இருந்துகொள்ளவோ, அல்லது அநீதிகளை சகித்துக் கொள்ளவோதானே வளர்க்கப்படுகிறோம். 

பிறகு என்ன மயிருக்கு இந்தப் பகிடிவதைக்கு எதிராக இங்கே எழுதித் தள்ள வேண்டும் என்பதுதான் எனக்குள் ஆறாத கேள்வியாக இருக்கிறது. 

ஒரு பிள்ளை முறைப்பாடு செய்தும் அதற்கு நீதி கிட்டவில்லையானால் அதற்காக நாங்கள் சமூகமாகக் குரல் கொடுக்கலாம். 

ஒரு பிள்ளை முறைப்பாடு செய்து அதனால் அந்தப் பிள்ளைக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்து எழலாம். 

ஆனால் சேற்றால் அடி வாங்கிய அந்தப் பிள்ளையே அதை சகித்துக்கொண்டு, குளித்து அபாயாவையும் கழுவிக் காயப்போட்டுவிட்டு குப்பறப்படுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சமூகமாக நாமோ, பல்கலைக்கழக நிர்வாகமோ என்னதான் செய்ய இயலும்?  

"எனது உள்ளாடையை தலையில் கட்டி பகடி வதை செய்தார்கள் அம்மா" என்று எழுதி வைத்துவிட்டு ஒரு பிள்ளை இறந்துபோகின்றது என்றால், அந்தப் பிள்ளை வளர்க்கப்பட்ட விதமும், அறிவூட்டப்பட்ட விதமும்தான் தவறு. அந்தப் பிள்ளைக்கு இறந்துபோவதை விட இலகுவான, ஆரோக்கியமான ஒரு தீர்வு முன்னே இருந்தது. 

சட்டங்கள் இறுக்கமாக இருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் பகிடி வதையை ஒழிப்பதில் மும்முரமாக இருக்கின்றன. ஆனால் மாணவர்களாக, பெற்றோர்களாக முறைப்பாடு செய்ய முன்வராதவரை இங்கே அணுவும் அசையப்போவதில்லை.  

நீங்கள் தலைகீழாக நின்றாலும் இந்தப் பகிடிவதையை ஒழிக்க இது மட்டுமே வழி. முறைப்பாடு செய்யுங்கள். தைரியமாக பிள்ளைகளும் பெற்றோர்களும் இந்தப் பகிடி வதைகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யுங்கள். பல்கலைக்கழக நிர்வாகம் உங்களுக்குப்பின்னால் நிற்கும். மஜ்லிஸ்கள் உங்களோடு நிற்கும். விரிவுரையாளர்கள் உங்களோடு நிற்பார்கள். சிவில் சமூகம் உங்களுக்குப் பின்னால் நிற்கும். உங்களுடைய பிள்ளையின் படிப்புக்கான சகல பாதுகாப்பையும், நூறுவீத உத்தரவாதத்தையும் பல்கலைக்கழகம் வழங்கும். 

அவர்கள் முறைப்பாடு செய்யாதவரை நாம் என்ன எழுதியும் ஆகப்போவதில்லை. அவர்கள் முறைப்பாடு செய்தால் நாங்கள் எதுவுமே எழுதத் தேவையும் இல்லை.
Zinthah Nawas


7 comments:

  1. You have to stop victim blaming and start doing something productive to stop such things from happening and getting the wrong doers from escaping justice.

    ReplyDelete
  2. Hear have Bic evidence vedio Take action
    No need complain
    U mean

    Child kku adikkum vedio Vai parthudu Child comment Pannala enru solluvathai Vida pudavaiyai kaddigollungal.

    ReplyDelete
  3. is it not enough to take action base on video released by them?how these girls will go to police for complain ? there are not that much strong specially our muslims girls
    if i m wrong please forgive me

    ReplyDelete
  4. பல்கலைக்கழகத்துக்கு நுழைய எம் சகோதரிகள் கஷ்டப்படுவது எங்கே சமூகத்துக்கு விளங்க போகிறது.

    ReplyDelete
  5. Infront of Admin things happening with evidence... not it shame to say that victim did not complain.. If this is rule to take action many crimes in this land will not come to end. Admin can pass the video to police ... ask them catch the bulls invovlved in this crime...

    If one kill an individual.. the victim.. do not expect the victim to go and complain... most of the new students are in the same status ..they are affraid... they will not go to police expecting problems for their education..

    It looks some staff even seem to like ragging...

    ReplyDelete
  6. பயம் பயம் பயம்

    ReplyDelete

Powered by Blogger.