February 27, 2019

இறக்குமதி பல்மாவில், பன்றிக்கொழுப்பு விவகாரம் - மார்க்கத் தீர்ப்பு என்ன..?

- ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் -

அண்மைக்காலமாக ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தக கைத்தொழில் கூட்டுறவு பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன கடந்த 05/02/2019 அன்று பாராளுமன்றத்தில் அந்த சர்ச்சையை கிளப்பி உள்ளார்!

ஆதாவது நியூஸிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு, பாம் ஆயில், லாக்டோஸ் எனப்படும் பண்டங்களும் மற்றும் சில இரசாயன கலவைகளும் இருப்பதாகவும் பால்மா மிகச் சிறிய ஒரு விகிதாசாரத்திலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார், அத்தோடு நியூஸிலாந்திலுள்ள அனைத்து பசுக்களும் 24 மணித்தியாலங்களும் பால் சுரந்தாலும் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால்மாவை உற்பத்தி செய்ய போதாது எனவும் அழுத்தமாக கூறியுமிருந்தார்.

பிரதி அமைச்சரின் கூற்றை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 08/02/2012 அன்று பாராளுமன்றத்தில் மறுத்திருந்ததோடு மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சர்ச்சை சூடுபிடித்த நிலையில் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க (HAC) ஹலால் அத்தாட்சிப் படுத்தும் கவுன்ஸில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலவை இல்லை எனவும் மேலும் அவர்கள் அதுகுறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது, அத்தோடு தாய்லாந்தில் உள்ள ஹலால் விஞ்ஞான ஆய்வுகூட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள பால் உற்பத்தி நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை மையமாக கொண்டே அவர்களது அத்தாட்சிப் படுத்தல் அமைந்துள்ளமை மற்றும் அவர்களால் இலங்கையில் பிரத்தியேகமாக பால்மா நம்பகமான ஆய்வுகூட பரிசீலனைக்கு உற்படுத்தப் படாமை என்கிற விடயங்கள் இன்னும் நுகர்வோர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திய்ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

விடயம் இவ்வாறு இருக்க சுகாதார அமைச்சருடன் அண்மைக்காலமாக பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டுள்ள இலங்கை வைத்தியர் சங்கம் பால்மா விவகாரத்தித்தையும் கையிலெடுத்துள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று 26/02/2019 விஷேட பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்திய இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் சற்று விபரமான ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளனர் பாலில் சுமார் 80% வீதம் நீர் இருப்பதாலும் அதனை ஆவியாகிய பின்னர் வரும் மாவுடன் பாம் ஆயில் செயற்கை கபோஹைதறேற்று, இரசாயனக் கலவைகள் பன்றியிளிருந்து பெறப்படும் மலிவான புரதம் ஆகியவை சேர்க்கப்பட்டே பால்மா தயாரிக்கப் படுவதாகவும் குறிப்பிட்டனர்.

ஒருபடி மேலே சென்று இயற்கையான பசும் பாலில் மிகச் சிறிய அளவே புரதம் விட்டமின் ஏ மற்றும் காபோஹைதறேற்று இருப்பதாகவும் பிள்ளைகளோ பெற்றார்களோ அதனை பிரதான ஆகாரமாக எடுக்க வேண்டாம் என்றும் குறிப்பாக பால்மாவை தவிர்ந்துகொள்ளுமாரும் வேண்டுகோலும் விடுத்துள்ளனர்.

அத்தோடு தாய்ப்பால் தவிர்ந்த வேறுவிலங்குகளின் பாலை மனித சிசுக்கள் அருந்துவதால் அவர்களது அறிவு மற்றும் குணாதிசயங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு இப்பொழுது இரண்டு விடயங்களிற்கு மார்க்கத் தீர்ப்புக்கள் மற்றும் வழிகாட்டல்கள் அவசியப்படுகின்றன, முதலாவதாக பன்றிக் கொழுப்பு (புரதம்) கலந்த பால்மா குறித்த சர்ச்சை இரண்டாவது விலங்குகளின் பாலை மனிதர் பருகுதல்.

முதலாவது சர்சசையைப் பொறுத்தவரை முஸ்லிம் பொதுமக்கள் தாம் பெரிதும் நம்புகின்ற சன்மார்க்க அதிகார சபை அல்லது அறிஞர்கள் சொல்லுகின்ற  ஆதாரபூர்வமான ஆய்வுபூர்வமான அறிவுபூர்வமான நிலைப் பாட்டினை பின்பற்றலாம்.

அல்லது சந்தேகம் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் “ஹலால் தெளிவானது ஹராம் தெளிவானது இரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்குரிய நிலை வரின் அதனை தவிர்ந்து கொள்ளல்” எனும் நபி மொழிக்கு ஏற்ப சந்தேகத்திற்குரிய பால்மா நுகர்வை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகையில் இமாம் தவறிழைப்பின் மாமூம்களுக்கு குற்றமில்லை என்பதுபோல சன்மார்க்க வழிகாட்டல்களிலும் பொறுப்பை உலமாக்கள் மீது சுமத்திவிடுகின்றமை  வழமையாகியுள்ளது, ஆனால் நோய்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு கேடுகள் வருகின்ற பட்சத்தில் பலியை அவர்கள் மீது போட்டு விடவும் முடியாது!

இரண்டாவதாக, வைத்திய சங்கம் கூறுவது போல் தாய்ப்பால் தவிர்த்து ஏனைய  பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தவிர்ந்தது கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை அல்குரான் மற்றும் சுன்னாஹ் தெளிவாகவே அது குறித்த வழிகட்டல்களை தந்துள்ளன.  

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பன்றியை ஆகாரமாக எடுப்பதனை எவ்வாறு எமக்கு தடுத்துள்ளதோ அதேபோன்றே ஆகாரமாக கொள்ளமுடியுமானவற்றையும் தெளிவாகவே கற்றுத் தந்துள்ளது, உண்மையில் பெரும்பான்மை மக்களும் பன்றியின் கொழுப்பை மாமிசத்தை தவிர்க்கப் பட வேண்டிய, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஆகாரமாக கருதுகின்றமை ஒரு சாதகமான விடயமாகும்.

அதுபற்றிய ஹலால் அஹாரம் பற்றிய தெளிவான செய்தியொன்றை முன்வைப்பதற்கு இது மிகவும் சிறந்த சந்தர்ப்பமாகும்.

அதேபோன்று கால் நடை வளர்ப்பு, பால் பால்சார் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் சமூகத்தில் மாத்திரமன்றி தேசத்திலும் ஒரு பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் சிறந்த சந்தர்ப்பம் மாத்திரமன்றி மாற்று வழிகளை கண்டறிவது எம்மீது விதிக்கப் பட்ட  கடமையுமாகும்.   

5 கருத்துரைகள்:

What this article trying to tell us???
What is the Solution for this problem???

"WITHOUT PREJUDICE"
ACJU - The Halal Accreditation Council (Guarantee) Limited, should NOT try to “HOODWINK” the Muslim community. The certification produced by the ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited, is doubted to be "not true". Thailand is a country where you can buy any such "CERTIFICATIONS" by paying money, it is alleged. The President and the authorities handling this matter should not be duped by these "DECEPTIVE" Muslim hoodwinkers and the ACJU. The Muslim community in Sri Lanka has to be greatfull to the Hon. Minister for revealing this information in the “floor of the parliament”.
It is a “HYPOCRATIC AND SHAMEFULL” statement that the ALL CEYLON JAMIYATHUL ULEMA (ACJU) operated sister NGO – The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established by the ACJU which calls itself as the Halal compliant certification issuing body has “FALSELY” made statements certfying the Milk powder alleged to contain Lactose and Pig Oil to be “HALAL”.
This is the greatest “DECEPTION and HOODWINKING to “DUPE” the Muslim community the All Ceylon Jamiyathul Ulema had done to our community. A PRESIDENTIAL COMMISSION SHOULD PROBE THE CORRUPTION OF THE ACJU, THE ILL EARNINGS THEY ARE MAKING BY PROVIDING FALSE HALAL CERTIFICATIONS AND THE ACTIVITIES OF THE The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established and operated by the hierarchy of the ACJU. http://www.adaderana.lk should use the RTI act to obtain the necessary informations about the activities of the ACJU and the Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established and operated by the hierarchy of the ACJU.
“THE MUSLIM VOICE” “DEMANDS” THE TRUTH FROM THE MILK IMPORTERS AND THE MANUFACTURERS/EXPORTERS ABROAD” TO REVEAL THE TRUTH TO THE MUSLIM COMMUNITY.
“THE MUSLIM VOICE” also requests/appeals all Muslims in Sri Lanka to “BOYCOTT” the purchasing of this type of Powdwred Milk that has leaked into the market, as stated by the Hon. Minister Budikka Pathirana – Deputy Minister of Trade and Commerce.
“THE MUSLIM VOICE” wishes to state that it fully endorses and support Hon. Budikka Pathirana’s statement in parliament and what the GMOA had stated in their press conference yesterd on the issue.
THE MUSLIM VOICE ALSO REQUESTS/APPEALS TO HE. MIATHRIPALA SIRISENA TO SET IN MOTIN AN OFFICIAL PROBE OF THE ALL CEYLON JAMIYATHUL ULEMA - ACJU CONCERNING IT'S CURRUPT EARNINGS, ISSUE OF FALSE HALAL CERTIFICTES FOR BIG KICK BACKS AND THEIR ALLEGED INVOLVEMENT WITH THE MUSLIM DRUG LORDS IN MALIGAWATTE AND THE DRUG TRADE, Insha Allah.
Noor Nizam.
Convener – “The Muslim Voice”.

We hear there are 3000 members in the ACJU, all of them obviously are clinging to this organisation to secure a livelihood. It has become very clear to the general public that its Halal Unit is exploiting the consumers with the fake Halal accreditation and is a clear attempt to cheat the masses. This puts the innocent consumers health & well being at risk, the Halal cheaters simply don't care as long as their pockets are getting filled. As Bro. Noor Nizam alleges if these ACJU Haramis are having connections with Maligawatte Drug cartels, where is the credibility of this filthy orgnanisation, now it is time we the Island's Muslims wake up and at least remove those rogue elements in ACJU. Last Ramadan Rizvi was assaulted or nearly assaulted for playing with moon-sighting. The Colombo Grand Mosque Authorities should step in again and take matters into their hands. I do not drink Powder Milk for health reasons and don't give a damn to this bogus Halal logo, people have enough halal products in the market place, one doesn't need any label to buy them. It is advisable to avoid any product in Lanka that has this fake Halal logo.

Salaams,

Dear Brother AZFA.
May AllMighty Allah give you rewards for standing to support a "TRUTH" to safeguard the hunmble Muslims of Sri Lanka from this "DECEPTIVE, HOODWINKING" All Ceylon Jamiyathul Ulema organization and the "MUNAAFIKK" Rizvi Moulavi, Alhamdulillah.
It is time up the Muslim community of Sri Lanka should UNITE to make this happen, Insha Allah. A public request/petition should be made/sent to HE. MIATHRIPALA SIRISENA TO SET IN MOTIN AN OFFICIAL PROBE OF THE ALL CEYLON JAMIYATHUL ULEMA - ACJU CONCERNING IT'S CURRUPT EARNINGS, ISSUE OF FALSE HALAL CERTIFICTES FOR BIG KICK BACKS AND THEIR ALLEGED INVOLVEMENT WITH THE MUSLIM DRUG LORDS IN MALIGAWATTE AND THE DRUG TRADE, Insha Allah. "The Muslim Voice" will fully support this action if it will be initiated for the benifit of the Muslim Community in Sri Lanka, Insha Allah.
Noor Nizam.
Convener – “The Muslim Voice”.

Dear Brother Noor Nizam,
Appreciate your comments.
I don' have any personal issues with anyone at ACJU, but I cannot bear to see such criminals hiding behind the screen of our religion ruining Islam, Muslims & our Nation. If they're connected to Drug Lords in Maligawatte it is a grave crime and such an organization has NO legitimate right to represent the Muslim Umma of Sri Lanka. As you may agree with me that traditionally for the Island's Muslims the Command Centre is the Grand Mosque in Colombo, the initiative of taking this corrupt organization’s activities to the notice of the President is an excellent move, therefore thru' the process of “Right to Information” also getting the support of Colombo Grand Mosque, the complaint to President when submitted will carry a lot of weight. (This is my suggestion, maybe you have better thoughts)

Post a comment