Header Ads



மைத்திரியியினால் அதிர்ந்த ரணில் - ஹக்கீமீன் அமைச்சு, அறிவியல் ரீதியானதா எனவும் கேள்வி

“திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சை எந்த அடிப்படையில் வர்த்தக அமைச்சுடன் இணைக்க கேட்கிறீர்கள்? இதில் என்ன விஞ்ஞானம் - அறிவியல் உள்ளது?”

இப்படி பிரதமர் ரணிலை பார்த்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்டார் ஜனாதிபதி மைத்ரி.

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சை வர்த்தக அமைச்சுடன் இணைக்க பிரதமர் விடுத்த வேண்டுகோளை மறுத்து கருத்து வெளியிடும்போதே ஜனாதிபதி இப்படி தெரிவித்திருக்கிறார்.

“ இப்படித்தான் முன்னரும்.. உயர்கல்வி அமைச்சுடன் நீர்வழங்கல் அமைச்சை இணைத்தீர்கள்.. எந்த அறிவியல் அடிப்படையில் இது நடந்தது..?” என்றும் கேட்டார் மைத்ரி...

- Siva-

1 comment:

  1. Sometimes uneducated MY3 makes more sense than the so called educated Ranil.

    ReplyDelete

Powered by Blogger.