Header Ads



கினியம இக்ராம் தாஹாவின் “உரிமைக் குரல் “நூல் வெளியீட்டு விழா

(ஏ.ஏ.எம்.றுசைக்)

கினியம இக்ராம் தாஹா  எழுதிய "உரிமைக் குரல்" சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா சென்ற 18- 01- 2019 வெள்ளிக் கிழமை மாலை பி.ப 4 மணியளவில்  குளி/இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடை பெற்றதது. இஹல கினியம மு.ம.வி தரம் 6 மாணவன் எம்.எம்.முஹம்மது முப்தி அவர்களின் அழகிய கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இவ்விழாவிற்கு பாடசாலையின் அதிபர் எஸ்.டி.எம்.ஹாசிம் தலைமை தாங்கினார். வரவேற்புரையை நூலாசிரியரின் சகோதரர் குளி/எதுன்கஹ கொட்டுவ மத்திய கல்லூரி அதிபர் எம்.ரி.எம் தஹ்லான் நிகழ்த்தினார்.

பிரதம அதிதியாக குளியாப்பிட்டிய கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். அஷ்ரப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கானெம் கினியம குளோபல் சொசைடி தலைவர் எஸ்.எச்.றியாஸ்தீன் மற்றும் பொருலாளர் எச்.ரிபாஸ் ஏற்பாட்டில் விமர்சையாக நடந்த விழாவில் உப தலைவர் எம்.எஸ்.எம்.றிமாஸ் முன்னிலை வகித்தார்.முதல் பிரதியை  ப்ரைட் சர்வதேச பாடசாலை பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். நஸீர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.அதே போல் விசேட பிரதியை  அப்ரா ஹார்ட்வெயார் உரிமையாளர் அல்ஹாஜ்  எப்.அலாவுதீன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கினியம மு.ம.வித்தியாலய தரம் 10 மாணவியர் குழுவின் அழகிய கஸீதாவும் தரம் 13 மாணவன் எம்.ஐ.எம்.சியாம் அவர்களின் இனிய கீதமும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.நயவுரையை  பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் வழங்கிய அதே வேளை,கருத்துரையை பிரதம அதிதி  எம்.ஏ.ஜீ. அஷ்ரப்  அவர்கள் வழங்கினார். அவர் உரையில் குறிப்பிட்ட சில விடயங்கள்:

உளவியல் ரீதியாக இந்த சிறுகதைத் தொகுதியை நோக்குகின்ற பொழுது ஒரு மனித வாழ்வில்,குறிப்பால இஸ்லாமிய குடும்ப வாழ்வியல் அம்சங்களில் துன்பம்,துன்பியல் நிகழ்வுகளில் இன்பம் இன்பகரமான மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் வந்து போவதுண்டு,குடும்ப வாழ்வைப் பார்க்கின்ற போது அங்கே சண்டையும் சச்சரவும் அல்லது வறுமையும் செழுமையும் மாறி மாறி ஏற்படுகின்ற போது மனிதனுடைய மனதில் ஏற்படுகின்ற ஏக்கம் அவர்களுடைய உள நெருக்கீடு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஒத்தனம் கொடுக்கின்ற ஒரு ஆற்றுப்படுத்துகின்ற கருத்துக்களை எடுத்துக் காட்டுகின்ற சிறுகதைகளை இக்ராம் தாஹாவின் நூலில் நான் காண்கிறேன்.

சமூகவியல் ரீதியாக நோக்கும் பொழுது சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வையும் சமூகரீதியாக நோக்கும் போது சமூகம் பொதுவாக இளைஞன் , மாணவன், பெண்கள் என சமூகத்தின் அமைப்பு அவர்களின்  இந்தக் கதைகளினூடக பார்க்க முடிகின்றது.முஸ்லிம் சமூகத்தின் அமைப்பு என்ன? அவ்ர்களின் வாழ்வியல் அம்சங்கள் என்ன? அதிலே இழையோடிப் போய் இருக்கின்ற ஒவ்வொரு துன்பரமான நிகழ்வுகளையும்,துன்பியல் நிகழ்வுகளையும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளையும் இக்ராம் தாஹா எடுத்து ஆழுகின்ற விதம் அதற்கு உதாரணம் காட்டுகின்ற முறை ஏதோ ஒரு கதையை வைத்துக் கொண்டு புதிதாக சொல்ல வரிகின்றமை மாத்திரமல்ல ஒரு புதிய தகவல் யுகத்தில் நாங்கள் வாழ்கின்றோம் அந்த தகவல் யுகத்தினூடாக எதனை நாம் இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் எவ்வாறு அவற்றைக் கையாள வேண்டும் எவ்வாறு பிள்ளைகளை வழிகாட்ட வேண்டும் என்று ஒவ்வொரு கதையிலும் அவர் ஆலோசனையாக சொல்கின்ற விதம் சிறுகதையிலே புதுமையாக நான் காண்கிறேன்.கதைப் பின்னல்,கதை சொல்கின்ற விதம்,அந்தக் கதையுன் முடிவு அந்தக் கதையை வாசிக்கத் தூண்டுகின்றது.” என தன் கருத்துரையில் குளியாப்பிட்டிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்  பிரதம அதிதி  எம்.ஏ.ஜீ. அஷ்ரப்  அவர்கள் குறிப்பிட்டார்.

கல்விமான்கள்,உலமாக்கள்,இலக்கியவாதிகள் மற்றும் பிரபலங்களும் ஊராரும் ஒன்று திரண்ட இந்த இக்ராம் தாஹாவின் நூல் வெளியீட்டு விழா இக்ராம் தாஹாவின் ஆனந்தக் கண்ணீருடன் கூடிய நன்றியுரையை அடுத்து இனிதே முடிவடைந்தது.நிகழ்ச்சிகளை அழகாய் ஐ.எல்.எம் இக்பால் ஆசிரியர் தொகுத்து வழங்கினார்.


No comments

Powered by Blogger.