Header Ads



சிறிய கட்சிகளுடன் இணைந்து, அரசாங்கத்தை அமைத்தால் சிக்கல்கள் ஏற்படும் - ரணில்

நிலையான அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டுமாயின் ஒரு கட்சிக்கு அதிகளவான ஆசனங்கள் கிடைக்கும் வகையில் தேர்தல் முறையில் மாற்றப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிய கட்சிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பலப்பிட்டிய பிரதேச செயலகத்தின் புதிய நான்கு மாடி கட்டிடத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறை தொடர்பாக இதுவரை இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை. பெரிய கட்சிகள் ஒரு நிலைப்பாட்டிலும் சிறிய கட்சிகள் வேறு நிலைப்பட்டிலும் உள்ளன. ஐக்கிய தேசிய முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

தேர்தல் முறையில் மாற்றங்களை செய்தால் நிலையான அரசாங்கம் ஆட்சியில் இருக்கும். இல்லாவிட்டால், வருடா வருடம் பிரதமர்கள் மாறுவார்கள். வாக்கெடுப்பு நடத்தும் போது நாடாளுமன்றத்தில் உள்ள லிப்டில் சிக்கினால், அந்த நேரத்தில் கூட அரசாங்கம் கவிழ்ந்து விடும். இதில் தான் பிரச்சினை உள்ளது.

அன்று சமஷ்டி முறை தொடர்பான பிரச்சினை இருந்தது. அடுத்த தேர்தலின் பின்னர் தேர்தல் முறை வேண்டும் என்று மக்களிடம் கேட்க வேண்டும். எங்களது முன்னணிக்கும் அடுத்த முன்னணிக்கும் இடையில் இதுதான் இழுப்பறியாக உள்ளது.

ஒரு கட்சி அரசாங்கத்தை கொண்டு நடத்தும் வகையில் தேர்தல் முறை இருக்க வேண்டும். சிறிய கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்தும் அரசாங்கத்தை அமைத்தால், அதனை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. 100% Agreed
    விகிதாசார தேர்தல் முறை முற்றாக நீக்கபட்டு, 100% தொகுதிவாரியான முறை தான் தேவை.

    தற்போதய தேர்தல் முறை ஜனநாயகத்திற்கு எதிரானது

    ReplyDelete
  2. மத்திய வங்கியின் பெரிய விஷயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு இல்லை. பொதுமக்களின் ஊழியர் சேமலாபநிதியின் கோடான கோடி பணத்துக்கு என்ன நேர்ந்தது? அது எப்போது திருப்பிக் கிடைக்கும் என சரியாகக் கூறுவீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.