February 20, 2019

கொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்

‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவனை செய்யும் முஸ்லிம் சம­யத்­த­லை­வர்­க­ளான லெப்­பே­மாரும்  இருக்­கின்­றனர். அவர்கள் பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்தும் துரத்­தி­ய­டிக்­கப்­பட வேண்டும். கொகெய்ன் மற்றும் போதைப்­பொருள் பாவனை செய்யும் அர­சாங்க மற்றும் எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 24 பேரின் விப­ரங்­களை சபா­நா­ய­க­ரி­டமும், சி.ஐ.டியி­ன­ரி­டமும் கைய­ளித்­தி­ருக்­கிறேன்’ என பெருந்­தெ­ருக்கள் மற்றும் வீதி அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார்.

மாதி­வெ­ல­யி­லுள்ள இரா­ஜாங்க அமைச்­சரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நடை­பெற்ற ஊடக சந்­தி­பொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். நேற்று முன்­தினம் நடை­பெற்ற இச்­சந்­திப்பில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, ‘பௌத்த மத­குரு ஒருவர் களு­போ­வில வைத்­தி­ய­சாலை கழி­வ­றையில் கொகெய்ன் பாவ­னையில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளார்.

அமைச்­சர்கள், இரா­ஜாங்க, பிரதி அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை, உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­களும் போதைப்­பொருள் பாவனை செய்­ப­வர்கள் மத்­தியில் இருக்­கின்­றார்கள். அத்­தோடு உயர்­ப­தவி வகிப்­ப­வர்­களும் இதில் அடங்­கி­யுள்­ளார்கள். விசா­ர­ணை­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­மென்­பதால் அவ்­வா­றா­ன­வர்­களின் பெயர்­களை என்னால் பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யாது.

கொகெய்ன் உட்­பட 11 போதைப்­பொ­ருட்கள் பாவனை செய்­யப்­பட்­டுள்­ளதா என கண்­ட­றியும் இரத்தப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­வ­தற்கு 4200 ரூபா தேவைப்­படும். நான் விரைவில் எனது இரத்தப் பரி­சோ­தனை அறிக்­கையை சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிப்பேன். ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தங்­க­ளது இரத்தப் பரி­சோ­தனை அறிக்­கையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்க வேண்டும். ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் போதைப்­பொருள் பாவ­னை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.

கொகெய்ன் பாவனை இந்­த­ள­வுக்கு அதி­க­ரிப்­ப­தற்கு  அர­சி­யல்­வா­தி­களின் தொடர்பே கார­ண­மாக இருக்க வேண்டும்.

போதைப்­பொ­ருளை ஒழிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முழு­மை­யான பங்­க­ளிப்­பினை வழங்­குவேன்.

தோட்டத் தொழி­லா­ளர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு பிர­பல பாரா­ளு­மன்ற   உ-றுப்­பினர் கொகெய்ன் பாவ­னை­யா­ள­ராவார். அவரை ஐந்து நட்­சத்­திர ஹோட்­டலில் ரஷ்ய பெண்­க­ளுடன் காண முடியும். மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே போதைப்   பொருளிலிருந்தும் தவிர்ந்திருக்கிறார்கள்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியிலுள்ள சிலர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டு கொழும்பில் மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரர் களாகவும் இருக்கிறார்கள் என்றார்.
-Vidivelli

8 கருத்துரைகள்:

Mr. Ranjan this is not your issue. First of all go inside temple & do what ever you want to do.
Mind your own business.
You are a RACIST behind the screen, many recent incident are evidence for it. Don't make unnecessary Show/Drama in society.

இவன் இவனுடைய எல்லைகளை மீண்டும் மீண்டும் மீறுகின்றான். தொப்பி போட்டவனெல்லாம் இவனுடைய பார்வைக்கு மெளவி போல் தெரிவது தான் பிரச்சினை

What about Drinking Alcohol ? Prostitution ? These are too highly punishable crimes. Why not Mr.Ranjan talk of these ?

உலமா சபை இவரிடம் பெயர் பட்டடியலைப்பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் பொய் கூறியிருந்தால் நாட்டுக்கு இவர் பொய்யயன் என்று பத்வா வழங்க வேண்டும். தயவு செய்து உலமா சபை உண்மை நிலை பற்றி அறிய முயற்சிக்க வேண்டும். சில நேரம் இவர் பக்கீர்மாரை குறித்துக் கூறலாம் அதனை ஆராய்ந்து பார்த்து அவர்கள் முஸ்லீங்கள் இல்லை என்றசெய்தியை வௌியிட வேண்டும். இவ்விடயம் உண்மையாயின் மிகவும் பாரதூரமான தவறு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் இன்றேல் பாரதூரமான அவதூறாகும்.

இவர் சொல்வதில் என்ன தவறு? பத்துயில்முயீன் (ஷாபி மத்ஹப்புத்தகம்) எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும் கிதாபில் உள்ளதை சொல்றாரோ அல்லது பத்துயில்முயீன் (ஷாபி மத்ஹப்புத்தகம்) கிதாப் படி பாவிப்பவர்களை கண்டு சொல்றாரோ தெரியவில்லை அதுவுமில்லவிட்டால் இப்ப யாரு உலமா யாரு பொது மகன் என்று தெரியாத கொழப்பம் நிறைய பேர் ஜுப்பாவும் தோப்பும் அணிந்து கொண்டு இருப்பதால் இவர்களில் சிலரை கண்டுவிட்டு சொல்றாரோ தெரியவில்லை எதுவானாலும் உண்மைகள் வெளிவரும்

Today we are confused about individuals not knowing who is good man who is fake. There are so many wolves in sheep's clothing, we really don't know? Like there is a Tamil saying "what kind of snake is inside an anthill"

فتح المعين கிதாப வம்புக்கு இழத்து எமது பல்லகுத்தி பிறரிடம் மோரகொடுக்காம அமைச்சரிடம் வினவி உண்மையைப் பெற்றுக்கொள்ளமுடியும்

Post a comment