Header Ads



பாராளுமன்றத்தில் போட்டுத்தாக்கினார் மைத்திரி

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க பாராளுமன்றம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். அன்றும் இன்றும் எனது நிலைப்பாடு அதுவே.

19 ஆம் திருத்தத்தினால் பிரசவிக்கப்பட்ட குழந்தை இன்று வழிதவறிப் போய்விட்டது.துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

அரசியலமைப்பு கவுன்சில் நியமித்த - பதவியுயர்வு வழங்கிய நீதிபதிகள் குறித்து நான் குறை சொல்லவில்லை. அந்த முடிவை விமர்சிக்கவில்லை . அப்படி நான் விமர்சித்ததாக கூறி எனக்கும் மேன்முறையீட்டு மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

ஆனால் இதுவரை 14 நீதிபதிகள் நிராகரிக்கப்பட்ட காரணம் என்ன? அவர்கள் என்னிடம் வராமல் எங்கு போய் நீதி கேட்பார்கள்?

நீதி மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பேசும் அரசியலமைப்பு பேரவை நீதிபதிகளை நிராகரித்த காரணத்தினை எனக்கு சொல்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டாமா? நீதி இருக்க வேண்டாமா? அரசியலமைப்பு பேரவை அரசியலமைப்பை மீறி செயற்படக் கூடாது.

நீதிபதிமார் நியமனத்தில் நான் எந்த தலையீட்டையும் செய்யவில்லை.உலகில் பல தானங்கள் இருந்தாலும் அதிகார தானம் செய்வது மிகவும் குறைவு. ஆனால் நான் செய்திருக்கிறேன். அரசியல் தலைவர்கள் செய்யாத தானத்தை நான் செய்தேன்.

மாகாண சபைகள் அமைக்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேல். ஆனால் மாகாண சபை முறைமையை பலப்படுத்த நாங்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாகாண சபையை நடத்த 85 வீத நிதியும் அபிவிருத்திக்கு 15 வீத நிதியும் செல்கின்றன. இதுவே உண்மை.

எமது தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.வாகனத்தினை நாம் செலுத்தி செல்லும்போது அது பாதையை விட்டு விலகினால் நாம் அதனை சரியான பாதைக்கு எடுக்க வேண்டும்.

அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக நான் பேசவில்லை. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழு பாதாள உலக கோஷ்டியினரை பற்றி பேசுகிறது. அவர்கள் இந்த நாட்டு மக்கள் பற்றி பேசுவதில்லையா என்று கேட்க விரும்புகிறேன்.

அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தை - நிறைவேற்று அதிகாரத்தை - நீதித்துறையை கட்டுப்படுத்துகிறது. அதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன..”

என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்ரி !

-Sivarjah

No comments

Powered by Blogger.