Header Ads



திகன - கண்டி கலவரம்

கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைச் சபையின் 37வது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் தான் இத்துயர் சம்பவம் நடந்தேறியது. 

பல நூறு கோடி உடமைகளுக்கு வேட்டு வைக்கப்பட்து.    எதிர்வரும் 25.02.2019 திகதி முதல் மீண்டும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.  

ஒடுக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியை வேண்டியும், ஒடுக்குவதை வேடிக்கை பார்த்த மைத்ரி -ரணில் அரசு அதன் அமைச்சர்களை அனுப்பி அப்படி நடக்கவில்லை, இப்படித்தான் நடந்தது என்ற வழமையான பொய்களை கட்டவிழ்த்து விட்டு பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்பிக்க எடுக்கப்பட்ட பிரயத்தனத்தால், ஜெனீவா களம் ஆடி அடங்கியது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க முற்று முழுதாகத் தவறிய அரசும் அதன் பரிவாளங்களும்,  இன்றைக்கு ஒரு வருடமாகியும் குறைந்த பட்சம் நட்டயீடு கொடுப்பனவுகளைக் கூட இன்னும் சரியாக் செய்யவில்லை.

 கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தளில் முஸ்லிம்களின் வாக்குககளை வழமையான பாணியில் வாங்கி பொக்கட்டுக்குள் போட்டுக் கொண்ட ரணில் அரசு சிங்களப் பகுதியில் படுதோல்வி கண்டது. முஸ்லிம்கள் வழமை போலவே UNP க்கு வாக்களித்தார்கள், இந்த கலவரம் மட்டும் இந்தத் தேர்தலுக்கு முன்பு நடந்திருந்தால் ரணிலுக்கு ஓடக்காடு இருந்திருக்காது. 

அது போலவே முஸ்லிம்களின் வாக்குகளால் ஜனாதிபதியான மைத்ரி  கூட இந்தக் கலவர கால கட்டத்தில் நடந்து கொண்ட முறை மிகவும் அருவருப்பானது. 

மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் முஸ்லிகளுக்கெதிராக நடைபெற்ற வன்முறைகளுக்கும், இந்த கண்டித் தாக்குதலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடவையாகவே காணப்படுகிறது.

ஆகவே மஹிந்த, மைத்ரி, ரணில் என முஸ்லிம்கள் நம்புவதில் எந்த அர்த்தமுமில்லை. 

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள  மனித உரிமைச்சபையில் இலங்கை முஸ்லிம்களை  மையப்படுத்திய செயற்பாடுகளை தொடரும் என்பதனை அறியத் தருகிறோம்.  எமக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமை (OIC), ராஜதந்திரிகள் என பலரை கடந்த மாதங்களில் தொடராகச் சந்தித்து அவர்களிடம் இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இடர்கள் குறித்து தெரியப்படுத்தி வருகிறோம். 

பல பக்க நிகழ்வுகளை நடாத்தி சட்டம் ஒழுங்கு எவ்வாறு முஸ்லிம்களுக்கு வேறாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதனை அங்கே நடைபெறுகின்ற கைதுகள், மற்றும் அசம்பாவிதங்களை ஆதாரங்களாக காட்டி வருகிறோம்.  

பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தப்பித்துக் கொள்ள எடுக்கும் அவர்களின் முயற்சிக்கெதிரான எமது முன்னெடுப்புக்கள் தொடர்கின்றன....

 முயிஸ் வஹாப்தீன்

2 comments:

  1. Masha Allah. Welldon Continue yours work truly for our society. Allah with us our every steps.

    ReplyDelete

Powered by Blogger.