Header Ads



இந்தியாவுக்கு இன்று, கிரிக்கெட்டிலும் விழுந்தது அடி

மெக்ஸ்வெலின் அதிரடி ஆட்டம் காரணமாக அவுஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை குவித்தது.

191 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆவுஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 22 ஓட்டங்களுக்குள் சரிந்தாலும் (மார்கஸ் ஸ்டோனிஸ் 7, பின்ஞ் 8) மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தாடிய டார்சி ஷார்ட் மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7 ஓவர்களின் முடிவில் 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். 

டார்சி ஷார்ட் 25 ஓட்டத்துடனும், மெக்ஸ்வெல் 13 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் 11.1 ஆவது ஓவலில் டார்சி ஷார்ட் 28 பந்துகளை எதிர்கொண்டு, 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரின் ஆட்டமிழப்பையடுத்து ஹேன்ட்ஸ்கோம்ப் களமிறங்க,  மெக்ஸ்வெல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை அனைத்து திசைகளிலும் பறக்க விட்டார். 

அத்துடன் 12.5 ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் 28 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாசியதுடன், அவுஸ்திரேலிய அணி 17 ஆவது ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 159 ஓட்டங்களை பெற்றது.

ஹேன்ட்ஸ்கோம்ப் 14 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாட 85 ஓட்டத்துடன் மெக்ஸ்வெல் ஆடுகளத்தில் தொடர்ந்தும் வான வேடிக்கை காட்டி வந்தார்.

மேலும் 18.1 ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் 50 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், 8  ஆறு ஓட்டம் அடங்களாக சதம் விளாசினார்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணிக்கு  6 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இருக்க இறுதி ஓவரின் 3 ஆவது பந்தில் மெக்ஸ்வெல் 6 ஓட்டத்தையும் அடுத்த பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தையும் விளாசி வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

மெக்ஸ்வெல் 113 ஓட்டங்களையும், ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.

2 comments:

  1. இந்தியாவில் ஒஸ்ரேலியா அணி தற்போதும் கிறிக்கட் விளையாடிக்கொண்டிருக்குறார்கள்.

    ஆனால் யுத்தம் ஆரம்பித்தவுடன், இலங்கை மற்றும் சகல மேற்கு நாடுகளும் பாக்கிஸ்தானுக்கு தமது விமான சேவைகளை நிறுத்தி, இந்த பயங்கரவாத நாட்டை தனிமை படுத்திவிட்டார்கள்

    ReplyDelete
  2. Athan solluvinamo ulla vantu ullukku uttuttu poitan endu.

    ReplyDelete

Powered by Blogger.