Header Ads



மரணதண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை, விடுவிக்குமாறு பாகிஸ்தான் வேண்டுகோள்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, உறுதியாக மரணதண்டனையை நிறைவேற்ற முடியும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 பேரில் நால்வர் வௌிநாட்டுப் பிரஜைகள் என்பதால், ஏனைய 13 பேருக்கு மாத்திரமே மரணதண்டனையை நிறைவேற்ற முடியும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குற்றவாளிகளின் பட்டியலில் 4 பாகிஸ்தானிய பிரஜைகளின் பெயர்களும் அடங்கியுள்ளன.

குறித்த நால்வரையும் விடுவிக்குமாறு பாகிஸ்தானிய அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மேலும் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 48 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 30 பேர் மேன்முறையீடு செய்துள்ளதால் அவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 பேரின் பெயர்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல், அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அனைத்து குற்றவாளிகளும் 50 க்கும் குறைவான வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Mr President,

    Please don't give any mercy for these drug traffickers whether they are foreigner or Srilankan. They should be beheaded instead of hanging them. Millions of Srilankan youngsters life have been destroyed and how they are going to compensate for this.

    ReplyDelete
  2. இலங்கை இதற்க்கு சம்மதிக்கவே கூடாது. போதை மாபியாக்களை தூக்கிலிட வேண்டும். அதேபோல் தென்னிந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தும் வடக்கு பயங்கரவாதிகளை சுட்டு கொல்ல வேண்டும்

    ReplyDelete
  3. பாக்கிஸ்தானுக்கு இவர்களை விட்டால் அங்கு சென்று ISIS யில் சேர்ந்துவிடுவார்கள், அதனால் இங்கேயே கொன்றுவிடுவது நல்லது

    ReplyDelete

Powered by Blogger.