Header Ads



45000 ஆண்டுகளுக்கு முன், இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தார்களா..?

45000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை காடுகளில் வாழ்ந்த, ஹோமோ சேப்பியன்கள் எனப்படும் ஆதி மனிதர்கள் தொடர்பான பிரமிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேப்பியன்கள் உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக அறிவுடன் வாழ்ந்தார்கள் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் Griffith பல்கலைகழக மாணவர்களும், கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த ஆய்வில் ஒக்ஸ்போட் மற்றும் குயின்ஸ்லாந்து மாணவர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேப்பியன்கள் குரங்குகளை வேட்டையாடி, உணவாக உட்கொண்டமைக்கான ஆதாரங்களும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது.

இலங்கையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட பாஹியங்கலை காட்டு பகுதியில் இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காட்டுக்குள் வேட்டையாடுவதற்காக அவர்கள் பயன்படுத்திய எலும்புகள் மற்றும் கல்லினால் செய்யப்பட்ட நூதனமான ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குரங்குகளின் வேகத்திற்கமைய அதனை வேட்டையாடுவது சாதாரண விடயமல்ல. எனினும் அதனை பிடித்து உணவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வினை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த காலத்தில் எதிர்பார்த்ததை விடவும் சேப்பியன்கள் அறிவுத்திறன் அதிகமாக இருந்தார்கள் எனன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் காணப்பட்ட காலநிலையின் அடிப்படையில் மலைக்காடுகளில் யாரும் வாழ்ந்திருக்க முடியாது என்ற நிலை காணப்பட்டது.

எனினும் புதிய ஆய்வின் மலைக்காடுகளின் ஆதி மனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBC

1 comment:

  1. அப்படி என்றால் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் யார்

    ReplyDelete

Powered by Blogger.