Header Ads



இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள தூக்குக்கயிறு 200 கிலோ கல்லைக்கட்டி பரிசோதனை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள தூக்குக்கயிறு 200 கிலோ கல்லைக்கட்டி பரிசோதிக்கப்படவுள்ளது.

இலங்கையின் தரநிர்ணய நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 12 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தூக்குக்கயிறு பழுதடைந்துவிட்டது.

எனவே புதிய தூக்குக்கயிறு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இந்தக்கயிறு பாகிஸ்தான், இந்தியா, சிங்கப்பூர் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று நீதியமைச்சு சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடிய அலுகோசு எனப்படும் பதவிக்காக 18 வயது முதல் 45 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த வாரத்தில் அறிவித்தல் விடுத்திருந்தது.

இதற்காக 36ஆயிரத்து 410 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்றும் அது அறிவித்திருந்தது.

இந்தநிலையில் இவ்வாறு அலுகோசு பதவிக்கான விண்ணப்பம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டமையை சர்வதேச மன்னிப்பு சபையின் தென்னாசிய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் கண்டித்துள்ளார்.

சிவில் சமூகத்தில் தூக்குத்தண்டனைக்கு இடமில்லை. எனவே இந்த பிரசுரிப்பு பிழையானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் 1976ஆம் ஆண்டு மருசிரா என்ற ஜே டி சிரிபால என்பவருக்கு இறுதியாக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை தூக்குத்தண்டனை தொடர்பில் சமய துறவிகளின் மௌனம் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் தமது கேள்வியை எழுப்பியுள்ளனர்.

2 comments:

  1. Do not we have technology to prepare even this piece of ROPE ?

    ReplyDelete
  2. தாமாகச் சாகும் வரை தாமதிக்கும் தாலிக்கயிறது!

    ReplyDelete

Powered by Blogger.